பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைஞர் மு.கருணாநிதி ஆம் என்று பொன்னர் சங்கர், தலையை மட்டும் அசைத்துப் பதில் கூறினர். "பெயர் சொல்லாததற்கு என்னப்பா காரணம்? ஒருவேளை உங்கள் பெற்றோர் பெயரே வைக்கவில்லையா?" அவர்களை விடாமல் மாயவர் இந்தக் கேள்வியைக் கேட்ட வுடன்; எங்கள் பெயரை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எங்கள் ஆசான் ராக்கியண்ணன் கட்டளை!" என்றான் பொன் னன்! அப்போது, சின்னமலைக் கொழுந்து சிறிதாக ஒரு கனைப் புக் கனைத்துக் கொண்டு ஏதோ சொல்வதற்கு முனைந்தார். அந்தச் சமயம். அருக்காணி தங்கம் நாலைந்து பெண்களு டன் சிற்றுண்டிகளை எடுத்து வந்து அவளே முன்னின்று அங் குள்ளவர்களுக்குப் பரிமாறச் செய்தாள். அந்த நேரம் சின்ன மலைக் கொழுந்து, தனது துணைவி சிலம்பாயியின் காதில் ஏதோ ரகசியமாகக் கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்காக அவ ளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது யோச் னைக்குப் பிறகு சிலம்பாயி. கணவனிடம் ரகசியமாகவே ஏதோ சந்தேகம் கேட்டாள். அதற்குரிய பதிலையும் சின்ன மலைக் கொழுந்து அவள் காதில் சொன்னார். சிலம்பாயி, ஆழமாக சிந்திப்பது புரிந்தது. பிறகு அவள் அவரிடம் தலையை ஆட்டிக் கொண்டு தனது ஒப்புதலை அவர் காதிலேயே கூறி னாள். சிற்றுண்டி பரிமாறிய பெண்கள் அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு, சின்னமலைக் கொழுந்து மீண்டும் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "இந்த வாலிபர்கள் வாலிபர்கள் பெயரைச் சொல்லாவிட்டாலும் உலகில் பெயரை நிலைநாட்டப் போகிறவர்கள் என்று இப் போதே எனக்குத் தெரிகிறது! விளையும் பயிர் முளையிலே என்பதற்கு இவர்களே உதாரணம்! கரகம் விடும் விழாவில் செல்லாண்டியம்மன் கோயிலில் சூறைக்காற்றில் படகோடு காவேரியில் போயிருக்க வேண்டிய என் பெண்களை இவர் களே காப்பாற்றினர்! அது மட்டுமல்ல; செல்லாத்தாக் கவுண் டர் மகன் மாந்தியப்பன். தலையூர் தளபதி திருமலையின் 161