பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகத்தின் எல்லை 22 தாமரைநாச்சியாரின் தயவினால் விடுவிக்கப்பட்ட வீர மலை, தனது குதிரையின் மீது தாவி ஏறியவன் சங்கர மலையை விட்டு, இவ்வளவு வேகமாக எப்படி வந்தோம் என அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு மாரிக்கவுண்டன்பாளையம் வந்து சேர்ந்தான். குழந்தைகளுடன் ராக்கியண்ணன் பாசறையில் தான் இருப்பார் என்ற திடமான எண்ணத்துடன் பாசறையை நோக்கிக் குதிரையை நடக்க விட்டான். பாசறை முகப்பிலோ உட்பகுதியிலோ தலையூர் வீரர்கள் யாரும் தென்படுகிறார் களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந் தான். அவர்கள் யாரும் காணப்படாததால்; ஒருவேளை தலை யூர்க்காளியின் வீரர்கள் காத்திருந்து ராக்கியண்ணனிடமிருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு போயிருப்பார்களோ என்ற சந்தேகமும் வீரமலைக்கு ஏற்பட்டது. சே! ஆசான் அப் படியொன்றும் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையொளி யும் உடனே தோன்றி அந்தச் சந்தேக இருட்டை விலக்கியது. குதிரையிலிருந்து இறங்கி, குதிரையை அப்படியே நிறுத்தி விட்டு பாசறையின் உட்பகுதிக்குள் சென்று பார்த்தபோது ஆசான் அங்கில்லை. வீரமலைக்கு வியர்த்துக் கொட்டியது. சங்கரன்மலைக்கோட்டையிலிருந்து அவர் நேராகத் தலையூருக்கே போயிருக்கக் கூடுமோ? என்று நினைத்து வீரமலை நடுங்கி னான். அவன் நடையில் அவனது அவனது இளமைக்கு முற்றிலும் மாறான ஒரு தளர்ச்சி! இருப்பினும் சமாளித்துக் கொண்டு, தான் வந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாசறை லாயத்தில் கட்டுவதற்காகப் போனான். அங்கு கண்ட காட்சி, அவனுக்கோர் ஆறுதல் பெருமூச்சை வரவழைத்தது. சங்கரன்மலைக்கோட்டைக்கு ராக்கியண்ணன் ஏறிச் சென்ற குதிரை லாயத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்படியானால் ஆசான். வீட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்று தீர்மானித் . 191