பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி ஓடிச் சென்று பொன்னர் - சங்கரைக் கட்டித் தழுவிக் கொண் டனர். பெற்ற மனங்களின் ஊற்றுக் கண்ணிலேயிருந்து தடைபடா மல் பெருக்கெடுத்த பாச உணர்வின் இன்பக் குளிர்ச்சியில் மெய் மறந்த பொன்னரும்-சங்கரும் தாய் தந்தையர் கால்களில் விழுந்து வணங்கினர். தங்கள் தண்மலர்களால் பாத பூஜை செய்தனர். பெற்றவுடன் பிரிந்துவிட்ட குழந்தைகளைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த தாயின் உள்ளத்தைப் போல" என்று, வேறு ஒரு நிகழ்ச்சிக்கு உவமை கூறலாம்! ஆனால் இப்போது அந்த உவமையே நிகழ்ச்சியாயிருக்கும்போது எந்த உவமையால் வர்ணிக்க முடியும்? தாய் தந்தையரின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பொன்னர் சங்கரைச் சிரமப்பட்டு மீட்டு சின்னமலைக் கொழுந்தும் சிலம்பாயியும் உச்சிமோந்து வாழ்த்தினார்கள். 44 'அண்ணா! இப்போது என்ன சொல்லுகிறாய்? உன் வாக் குறுதியை நீ நிறைவேற்ற வேண்டுமானால் என் தயவுதான் வேண்டும். உன் பெண்களை மீட்டுக் கொடுத்தால் இவர் களுக்கே மணமுடிப்பதாகச் சொன்னாயே; நான் சம்மதிக் காமல் எப்படி முடியுமண்ணா?" என்று புளகாங்கிதத்தோடும் பெருமிதத்தோடும் தாமரைநாச் சியார். சின்னமலைக்கொழுந்தைப் பார்த்துக் கேட்டாள். சின்னமலைக்கொழுந்து, தனது சகோதரியின் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கண்டு குறுக்கே எதுவும் பேசாமல் நின்றபோது முத்தாயி பவளாயி இருவரும் ஏற்கனவே சிவந்திருந்த கன்னங் கள் மேலும் சிவக்க அங்கிருந்து நகர்ந்து திரைமறைவுக்குள் போய் நின்று கொண்டார்கள். அவர்கள் ஆணையிட்டும் கேட் காமல் விழிகள்மட்டும் வண்டுகளாய் கிளம்பி பொன்னர் சங்கரை மொய்த்துக் கொண்டிருந்தன. 'என் தங்கை தாமரையின் சபதமே நிறைவேறட்டும். என் தங்கையிடம் நானே கேட்கிறேன். என் மகள்கள் முத்தாயியை பொன்னருக்கும், பவளாயியை சங்கருக்கும் கட்டிக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்கிறேன். போதுமா? இன்னும் கெஞ்ச வேண்டுமா?" என்றார் சின்னமலைக்கொழுந்து. 'நீங்கள் கேட்காவிட்டாலும் சரி; அவர்கள் சம்மதிக்காவிட் டாலும் சரி; நம் எல்லோரையும் மீறி இந்தத் திருமணம் 205