பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வந்தவனைப் போல காளி மன்னன் அலறிவிட்டான். "செல்லாத்தாக் கவுண்டரை இழித்துரைக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன்!" இது போதாதா செல்லாத்தாக் கவுண்டருக்கு? இப்படி யொரு வாய்ப்பைத்தானே அவர் எதிர்பார்ப்பார். மளமள வென்று அவர் பேசலானார். பல "பெரிய மன்னர் என்னை இந்த அரசுக்கும், காளி மன்ன னுக்கும் புரவலராக நியமித்த காலம் தொட்டு அணுவளவும் பிரியாமல் அருகிருந்து ஒரு தாயைப் போல் பரிவு காட்டி வருகிறேன் நான். மந்திரி மாயவரோ, நாட்டுப்பற்று சிறிது கூட இல்லாமல், கோபதாபங்களைக் காரணம் காட்டி ஆண்டுக்காலம் ஊர் சுற்றி விட்டு மீண்டும் பதவிக்காக இங்கு வந்தவர். ஏதோ பெரியவர், மேதை என்பதற்காக காளி மன் னன் மரியாதை காட்டியதையும், நானும் இவரை ஒரு பொருட் டாக மதித்து இவரது கருத்துக்களுக்கு இதுவரை மறுப்புத் தெரிவிக்காமல் இருந்ததையும் நமது பலவீனம் என்றே நினைத்து விட்டார். எனக்கென்ன வந்தது? எனக்கேது சுயநலம்? என் னுடைய வளநாடு, அரண்மனை, கோட்டை, அனைத்துமே தலையூருக்கு தாரை வார்க்கப்பட வேண்டுமென்றால், அதை உடனே செய்து விட்டு ஒரு துறவி போலக் காவியுடை அணிந்து, தலையூர் அரண்மனையில் ஒரு மூலையில் கிடந்து ஆண்ட வனைச் சேவித்துக் கொண்டிருக்க நான் தயார்! என்னைப் பார்த்து மாயவர் மனந்துணிந்து குறை சொல்லவும், அதை நான் கேட்டுக் கொண்டிருக்கவுமான ஒரு காலமும் வந்து விட்டதே! அதுவும் மன்னனுக்கு நேராக என் கௌரவம் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுகிறதென்றால்; இதை யெல்லாம் கேட்டுக்கொண்டு இனியும் நான் உயிர் வாழ வேண்டுமா?" உருக்கத்தை மிக அதிகமாகவே கலந்து நடித்த செல்லாத்தாக் கவுண்டரின் நாடகத்தில் தலையூர்க்காளி மேலும் மயங்கினான். 'எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டும்? மாயவர் யோச னையைக் கேட்டு நான் போரை நிறுத்தப் போவதில்லை! படைத்தளபதி பராக்கிரமனுக்கு நான் பிறப்பித்த ஆணைகள் திரும்பப் பெறக்கூடியவைகள் அல்ல! குடையூர் கோட்டை கொத்தளங்கள் நமது வசமாகும். ஆரிச்சம்பட்டி இனி மேல் நமது கொடி நிழலில்! சங்கரமலையில் உள்ள குன்றுடையான் 226