பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி குடும்பமும்,ஆரிச்சம்பட்டி குடும்பமும் தலையூர் சிறைச்சாலை யில் தவமிருக்க வேண்டும்!' தலையூர்க்காளி முழக்கம் செய்தான். . 'ராக்கியண்ணனை வெளியே விட்டு வைப்பதும் நல்ல தல்லவே?' செல்லாத்தாக் கவுண்டர், தனது தூபத்தில் ஒரு பிடி சாம்பிராணி அள்ளிப் போட்டார். அது நன்றாகப் புகைந்தது. .. 'ஆமாம்! ஆசான் என்று பார்க்காமல் அந்த துரோகி ராக்கி யண்ணனையும் கைது செய்க! என்று கூச்சலிட்டான் தலையூர்க் காளி!" 14 11 "நான் சொல்வதைக் கேள், காளி!" என்றார் மாயவர். முடியாது! பராக்கிரமா! ஆணையை நிறைவேற்று!' என்று கூறிவிட்டுக் காளி மன்னன் அந்த இடத்தை விட்டு அகன்றான். இனி எனக்கு இங்கு வேலையில்லை" என்று சொல்லிய வாறு மாயவர் அங்கிருந்து வெளியேறுவதை காளி பார்த்தான் என்றாலும் அதற்காக அவன் கவலைப்பட்டு அதிர்ச்சி அடைய வில்லை. 227