பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இருபுறம் பெரும்படை/ 27 101 ஆரிச்சம்பட்டியில் மணமகள்களின் அரண்மனையில் முறைப் படி நடைபெற வேண்டிய திருமணம் சங்கரமலைக்கோட்டை யில் போர்ச்சூழலுக்கிடையே நடைபெற்றாலும் மரபுக்கேற்ப மணவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. உடனே நிச்சயதார்த்தம் உடனே மணவிழா என்ற நிலையில் ஒரே பரபரப்பு! சங்கர் பொன்னர் முத்தாயி -சங்கர் பவளாயி திருமண நிச்சயம் செய்து வெற்றிலை பாக்குப் பரிசம் போடப்பட்டது. அழகிய பந்தலொன்று மணவிழாவுக்கென அமைக்கப்பட்டு மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. புதுமணல் பரப்பி வாழை மரங்கள் வரிசையாக வைக்கப்பட்டன. பொன்னர்- இருவரின் உடனிருந்து வையம்பெருமானும் வீரமலையும் மண மகன்களுக்குரிய அலங்காரங்களைச் செய்தனர். அருக்காணித் தங்கமும் அவளது அருமைத் தோழி குப்பாயிக்குச் சொல்லி யனுப்பி பக்கத்து சிற்றூரில் இருந்த அவள் மணமகள்கள் இரு ரு வருக்கும் தேவையான ஆடை அணிகளுடன் வந்து சேர்ந்து விட்டாள். அருக்காணித் தங்கம் குப்பாயி இருவரும் மணமகள் களின் தோழிப் பெண்களாகச் செயல்பட்டு மணவிழாப் பணி களைச் பம்பரமெனச் சுழன்று ஆற்றிக்கொண்டிருந்தனர். சங்கரமலைக்கோட்டை வாழ் பெரியவர்களும் அவர்களுடன் ராக்கியண்ணனும் மணப்பந்தலில் அமர்ந்து மணமக்களை அகமும் முகமும் மலர வாழ்த்திக் கொண்டிருந்தனர். பொன்னர் சங்கர் இருவரையும் குதிரைகள் மீதேற்றி கோட்டையைச் சுற்றிவரச் செய்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நாணத் தால் முகம் சிவந்திருந்த முத்தாயி பவளாயி இருவரும் குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் வந்தமர்ந்தனர். தாமரை நாச்சியாரும் சிலம்பாயியும் எத்தனையோ வேதனைகள் உள் ளத்தில் அழுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒருக் கணம் மறந்து விட்டு, தங்கள் மக்களின் மணக் கோலத்தைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். 238 '