பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொள்ளர்-சங்கர் மட்டுமல்ல, களங்காணத் துடிக்கும் காளையைக் கணவனாகப் பெற்றோமேயென்று களிபேருவகை கொண்டாள். அவன் முன்னால் தனது கலக்கத்தைக் காட்டிக் கொள்வது கூடாது என்ற நினைப்பில் தலையைக் குனிந்து கொண்டு விழிகளை மட்டும் மேலுயர்த்தி அவனைப் பார்த்தாள். "போய் வருகிறேன். பொன்னர் உதடுகளைக் கடந்து வெளிப்பட்டது வார்த்தைகள் தான் என்றாலும் அந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் ஈட்டியாக உருவெடுத்து அவள் நெஞ்சைத் துளைத்திடத் தவற வில்லை. சமாளித்துக் கொண்டாள். குங்குமத் திலகமிருந்த தட்டை எடுத்து வந்து அவன் முன்னால் நீட்டியபடி நின்றாள். பொன்னர் அந்தத் தட்டிலிருந்த குங்குமத்தை விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். மீண்டும் ஒரு முறை சொல் லிக் கொண்டான். "வருகிறேன்" என்று! "வெற்றியோடு திரும்புங்கள்" என்று முத்தாயி சொன்னாள். ஆனால் அந்தச் சொற்றொடரின் ஒவ்வொரு எழுத்தும் கடுங்குளிரில் நடுங்கும் சிசுவைப் போல் நடுங்கின. பொன்னர் அந்தப்புரத்திலிருந்து கிளம்பினான். முத்தாயியின் விழிகள் அவன் தோள்களில் தொத்திக் கொண்டன. பவளாயி, முத்தாயியை விடக் கொஞ்சம் துணிவுடையவள். சங் கர் அவளது அந்தப்புரத்தில் நுழைந்தவுடனேயே,புறப்பட்டு விட்டீர்களா?" என்று கேட்டுக் கொண்டே எதிர் வந்து நின் றாள். நின்றவள் கண்ணுக்கு நேரே நெடுங்குன்றமொன்று படைக் கலன்களுடன் போருடை அணிந்து நிற்பது போல சங் கர் வந்து நின்றான். "ஆமாம் பவளம்; புறப்பட்டு விட்டேன்!" என்றான் சங்கர்! உங்கள் வெற்றிக்காக நான் தவமிருப்பேன் என்றாள்! வரம் கேட்டுத்தான் எனக்கு வெற்றி கிடைக்க வேண்டுமா? என் நெஞ்சுரத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?" என்று கேலி செய்தான் சங்கர்! - "நிச்சயம் வெற்றியுடன்தான் திரும்புவீர்கள். அதில் சந் தேகமில்லை" எனக் கூறிக் கொண்டே குங்குமத் தட்டெடுத்து வந்து அவன் முன்னே நீட்டினாள். சங்கர் அவளைப்பார்த்துக் கொண்டே, குங்குமத்தை எடுத்து நெற்றியில் திலகமிட்டுக் 242