பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி சங்கர்; நான் கூறுவதைக் கவனமாகக் கேள்! வளநாட்டு ஆட்சிக்காவலரும் தலையூர்க்காளியின் புரவலருமான செல் லாத்தாக் கவுண்டரின் பொல்லாத போதனைகளே காளிமன்ன னுக்கு புனித வேதமாகிவிட்டது. உங்களிருவரையும் மாரிக் கவுண்டன்பாளையத்தில் விடுத்துப் பிரிந்துசென்ற நான் நேராகத் தலையூர்தான் சென்றேன். எனது நோக்கம் தலையூர்க்காளி யைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்பது. ஆனால் திருந்தக்கூடிய அளவுக்கு பக்குவம் பெற்ற அவனது உள்ளத்தைச் செல்லாத்தாக் கவுண்டர் விஷப்பொய்கையாகவே மாற்றி விட்டார். குடையூரில் தலையூர்க்காளியின் படைகள் பிரவேசிக்க வேண்டுமாம் ஆரிச்சம்பட்டியும் தலையூருக்கு அடிமையாக வேண்டுமாம் - சங்கரமலைக்கோட்டையில் உள்ள வர்கள் - தாய் தந்தையர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப் பட்டுத் தலையூர் சிறைச்சாலைக்குக் கொண்டு இத்தனை உத்திரவுகளையும் ஏற்று தலையூர்ப் பெரிய தளபதி பராக்கிரமன் படையெடுப்புகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டான். என்னுரையில் எதையும் ஏற்றுக்கொள்ளாத காளிமன்னனிடம் இனிப் பணி யாற்றுவதில் பயனில்லையென்று பதவி துறந்தேன். உறையூர்ச் சோழ மன்னனிடம் சென்றேன். உதவிப் படையைப் பெற் றேன். ஓடோடி வந்துள்ளேன். உங்களுக்குத் துணைநிற்பதற் காக!" வரப்படவேண்டுமாம் மாயவரின் சொற்களைக் கேட்ட சங்கர் நன்றிப்பெருக்குடன் குதிரையை விட்டு இறங்க முயன்றான். ஆனால் மாயவர் அவனைத் தடுத்து. வேண்டாம் சங்கர்! நாம் இங்கே தாம திக்கும் ஒவ்வொரு கணமும் தலையூர்க்காளியின் படைகள் இங்கு வந்து சேர்வதற்கு வழிவகுத்து விடுவதாக இருக்கும். எனவே விரைந்து செல்வோம் போர்முனைக்கு! என்றார். 16 'நான் முதலில் சென்று அண்ணனிடம் தகவல் தெரிவித்து விபரம் கூறுகிறேன்.' . என்றுரைத்த சங்கர், தனது குதிரையை முன்னிலும் பல மடங்கு வேகமாக வளநாட்டு எல்லையில் பொன்னர் போர் புரிந்து கொண்டிருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். 44 'தம்பி சங்கர்; சோழநாட்டுப் பெரும்படை துணைக்கு வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்து விடாதே! சோழமன்னன் என்ன நிபந்தனையோடு படையுதவி செய்துள்ளான் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்!' 249