பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி வழியாகக் கோட்டையிலிருந்து வெளியேறி வளநாட்டை விட்டே ஓட்டம் பிடிக்கவேண்டியதாயிற்று. இத்தனையும் முடிந்தபிறகு அங்குவந்து சேர்ந்த தலையூர்ப்படை எண்ணிக் கையில் மிகக் குறைவாக இருந்தபடியால் - எதிர்பார்த்ததை விட பெரும்பலத்துடன் வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருந்த பொன்னர் - சங்கர் இருவரையும் எதிர்த்து முன்னேற முடியாமல் திரும்பிச் சென்றது. வளநாடு வசப்பட்டது என்ற பெருமகிழ்ச்சி பொங்கிட பொன்னரும் சங்கரும் மாயவருடன் அந்த மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகையின் எந்த அறையை நோக்கினும் அவிழ்ந்து கிடக் கும் ஆரணங்குகளின் ஆடைகள், கவிழ்ந்து கிடக்கும் மதுக் கலயங்கள் இவைகளே பெருங்காட்சியாக இருந்தது. அனைத் தும் அரை நாழிகைக்குள் தூய்மைப்படுத்தப்பட வேண்டு மென மாயவர் ஆணை பிறப்பித்தார். ஆரிச்சம்பட்டி வீரர் களும் சோழப்படை வீரர்களும் மாயவரின் ஆணையேற்று மாளிகையில் நிறைந்திருந்த அத்தகைய மாசுகளை அகற்றினர். கோட்டை கொத்தளம் அரண்மனைப் பகுதிகள் அனைத் திலும் பொன்னர் சங்கர் தமது வீரர்களைக் கொண்டு காவலைப் பலப்படுத்தினர். வளநாட்டு வீரர்கள் பலர் பொன் னர் - சங்கர் முன்வந்து வீழ்ந்து தங்களை மன்னித்தருளுமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். வளநாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கோட்டை முகப் பில் குழுமினர். அநியாய ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட மகிழ்ச்சியை விழாவாக எடுத்தனர். எங்கணும் "பொன்னர்- சங்கர் வாழ்க!' என்ற முழக்கம்! இருமருங்கிலும் பொன்னர் - சங்கரை அணைத்தவாறு மாய வர் கோட்டைமுகப்பின் உச்சியில் வந்து நின்றார். குழுமியிருந்த மக்கள் வான்முட்ட வாழ்த்தொலியெழுப்பினர். அனைவருக்கும் கேட்கும்படியாக ஓங்கிய குரலில் பேசினார். 1 "அநீதி மனப்பான்மை கோன்மை - - மாயவர் அராஜகம் பழிவாங்கும் தன்மை அடிமை காட்டிக் கொடுக்கும் கயமை கொடுங் எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இன்று முதல் உண்மையான சுதந்திர ஆட்சி வளநாட்டில் மலர்கிறது. இந்த ஆட்சியைக் கட்டிக்காக்க இருக்கும் இணை 253