பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - வீரர்களாக திகழவில்லையா? "பிரமச்சரியம்' பிரமச்சரியம்" மன உறுதிக்கு மேலும் வலிமை சேர்க்குமென்றாலும் இல்வாழ்க்கை அந்த வலிமையை அளிக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது? நான் செய்த சபதம் சரி! பொன்னர் சங்கரிடம் அந்தச் சபதத்தை முடிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததும் சரி! ஆனால்... ஆனால்... அந்த இளம் பெண்களின் ஆசைக் கனவுகளைக் கலைத்தது பெரும் பாபம்! இதற்கு நான் நிவா ரணம் தேடியாக வேண்டும். இப்போதே பொன்னர், சங்கர் முத்தாயி, பவளாயி அவர்களின் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி, சபதத்தை நிறைவேற்ற பிரமச்சரிய நிபந்தனை தேவையில்லை என்று சொல்லியாக வேண்டும். இப்படி ஆசானின் உள் மனம் உணர்த்தியது. அதனால் அவர்களை அழைத்து வரச் சொல்ல வேண்டுமென்று இதயம் துடித்தது. குப்பாயி!" என்றார். . 'அய்யா!" என அன்பொழுகக் கேட்டாள் குப்பாயி! "உடனே போய் பொன்னர் ரையும் அழைத்து வா!" என்றார். - சங்கர் மற்றும் எல்லோ ..6.6 குப்பாயி, பெரிய மருத்துவரை எழுப்பி விட்டு, ஆசா னைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் அனைவரையும் அழைத்து வருகிறேன்" என ஓடினாள். 44 ஓடியவள்;கோட்டைக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று, ஆசான் நன்றாகப் பேசுகிறார், நலமுடன் இருக்கிறார். உங் களை அழைத்து வரச் சொன்னார்" என்று மெத்தப் பரபரப் புடன் அழைப்பு விடுத்தாள். எல்லோரும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து ஆசான் இருந்த அறைக்கு ஓடி வந்தனர். அப்போது மருத்துவர்கள் ஆசானின் கட்டிலை சூழ்ந்து நின்றனர்.பொன்னர் - சங்கரும் அவர் களைத் தொடர்ந்து எல்லோரும் வருவதைக் கண்ட பெரிய மருத்துவர் அவர்களின் எதிரே நின்று சோகத்துடன் தலை யைக் குனிந்து கொண்டார். பொன்னரும் சங்கரும் அவரைப் பார்த்து, மருத்துவரே!" என்றலறினர். மருத்துவர் அமைதி யாகச் சொன்னார் ஆசான் அமரராகி விட்டார்!" என்று! 41 - 272