பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் நெல்லியங்கோடனின் முழு வர்ணனையும் முடிவதற்குள் அவன் அத்தை குறுக்கிட்டு; இதெல்லாம் கலியாணம் முடிந்த பிறகு தாமரையிடம் பேசிக் கொள்ளலாம் என்று சாதுர்ய மாகத் தடுத்துவிட்டாள். கதவை உடைத்துக் கொண்டு கனல் கக்கும் எரிமலையாக உள்ளே நுழைந்த மலைக்கொழுந்தாக் கவுண்டர்; பெருமாயி அம்மாள் நெல்லியங்கோடனிடம் கொண்டுள்ள உறவின் பாச உணர்வையும், அவனையே மணப்பதற்குக் காத்திருந்ததாகக் கூறிய தாமரைநாச்சியின் காதல் நெஞ்சத்தையும் புரிந்து கொண்டு அவர்களின் மனத்தை மாற்றுவதற்கு வேறுவகை யான உத்தியைக் கையாள முயன்றார். "செல்லாத்தாக் கவுண்டர் நம்மை விடப் பலமடங்கு சிறப் பும் செழிப்பும் உள்ளவர். ஒரு சிற்றரசுக்குச் சமமான செல் வாக்கும் ஆள் அம்பும் உடையவர். அவரைப்போய் விரோ தித்துக் கொள்வது நமக்கு நல்லதா? 86 . இப்படியொரு கேள்வியை எழுப்பியவுடன்; நெல்லியங் கோடன், தனது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு 'மாமா சொல்வதும் சரிதான்! செல்லாத்தாக் கவுண்டர் எமன் என்றால் அவர் மகன் மாந்தியப்பன் இருக்கிறானே; அவன் எமகிங்கரன் இருவரின் பகையைத் தேடிக் கொண்டால் பிறகு மணியங்குரிச்சிக்கு ஆபத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. எதற்கும் யோசித்து முடிவு செய்யுங்கள் என்றான். தனது அத்தானின் பேச்சு அசட்டுத்தனமாகப் போவதை எண்ணி வருந்திய தாமரை 'அப்பா! அத்தான் எவ்வளவு நல்லவர் என்பது இப்போதாவது புரிகிறதா? புரிகிறதா? இப்படியொரு உத்த மருக்கு நான் எப்படியப்பா துரோகம் செய்ய முடியும்? என்று விம்மியழத் தொடங்கி விட்டாள். 44 .4 'எல்லாம் சரியம்மா; நம்முடைய மணியங்குரிச்சியின் மானப் பிரச்சினையும் இதில் அடங்கியிருக்கிறது என்பதை மறந்து விடாதே! "மகளின் வாழ்க்கைப் பிரச்சினையை உங்கள் கௌரவப் பிரச்சினைக்காக அலட்சியப்படுத்துவது நியாயந்தானா அப்பா? இப்போது அமைதியாகப் பெருமாயி அம்மை தலையிட் டாள். 20