பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - லிருந்து வந்து குழுமியிருக்கும் கொங்கு மக்கள் எல்லோரும் நமது முடிவைக் கேட்டால் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கமாட் டார்களா? பெருமாயி! உன்னை மணந்த குற்றத்திற்காகவும் தாமரை! உன்னை மகளாகப் பெற்ற குற்றத்திற்காகவும் இந்த மணியங்குரிச்சி மலைக்கொழுந்தானின் மானம் கப்பலேற வேண்டுமென்று சொல்வீர்களேயானால் அது எனக்கு சம்மதம் தான்! இப்படிப் பேசிக் கொண்டிருந்தவருக்கு; மேலும் பேச நா எழவில்லை. தோளில் புரண்ட பட்டுப் பீதாம்பரத்தையெடுத் துக் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவரது நிலை கண்டு பதறிப்போன நெல்லியங்கோடன் அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு; மாமா! எனக்குக் கல்யா ணமே வேண்டாம். நான் பிரமச்சாரியாகவே இருந்துவிடு கிறேன். என்னால் உங்கள் குடும்பப் பெருமைக்குக் குந்தகம் வரவேண்டாம்!' என்று உணர்ச்சி பொங்கக் கூவினான். அவனது செயலை அணுவளவுகூட ஒப்புக்கொள்ள மனமில் லாத தாமரைநாச்சி தன்னையும் மறந்து ஆவேசமாகக் கத்தி னாள்! 14 "அப்பா! அம்மா! அத்தான்! நீங்கள் மூவரும் சேர்ந்து ஏதோ ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால் அதே நேரத்தில் என் முடிவையும் கேட்டுக் கொள்ளுங்கள். மணந்தால் என் அத்தான் நெல்லியங்கோடனைத்தான் மணப்பேன். இல்லை யென்றால்; உங்கள் விருப்பப்படியே மலரும் காலைப்பொழு தில் இந்தத் தாமரைநாச்சியின் பிணத்துக்கு மாந்தியப்பனை விட்டு மங்கலநாண் பூட்டச் சொல்லுங்கள்!" தாமரையின் கண்களில் பறந்த தீப்பொறியையும் அவள் நெஞ்சில் நிறைந்த வைராக்கியத்தையும் உணர்ந்த மலைக் கொழுந்தாக் கவுண்டர் தூணோடு தூணாக அசைவற்று நின்று விட்டார். தாமரை!" என்று அவளது பேச்சைத் தடுத்திடக் குறுக் கிட்டான் நெல்லியங்கோடன்! சும்மா இருங்களத்தான்!" என்று அவனை ஒருமுறை தாமரை முறைத்துப் பார்த்ததும் அவன் எதுவும் பேசாமல் நின்றுவிட்டான். தாமரைநாச்சி அவன்மீது கொண்டுள்ள அன் பின் ஆழம் அவனுக்குப் புரிந்ததால் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டான். 22