பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'தூங்குங்கள், வருகிறேன்! என்று என்று சொல்லிவிட்டுப் போனவளை இளவரசி, 'குப்பாயி! இங்கு வாயேன்!" என அழைத்தாள்! குப்பாயியும் இளவரசியின் படுக்கையருகே வந்து. 'என்ன இளவரசி?" என்று கேட்டாள்! 44 'ஒன்றுமில்லை! இந்த வீரமலை இரவு முழுவதும் கோட்டை கொத்தளங்களைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பாரா? இரவில் தூங்கவே மாட்டாரா?" குப்பாயிக்கு தூக்கி வாரிப் போட்டது! ஓகோகோ ! இளவர சிக்குத் தூக்கம் வராத காரணம் புரிந்துவிட்டது! என்று அவ ளது மனம் மௌன மொழி பேசிற்று! "இல்லை இளவரசி! கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு ஓய்வெடுப்பார்! ஆனால் திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு கோட்டை கொத்தளங்களைச் சுற்றிப் பார்க்கப் போய் விடுவார்!" இளவரசி, அந்த பதிலைக் கேட்டு நிம்மதியடைந்தவளைப் போலக் காணப்பட்டாள்! இருந்தாலும் அவளிடம் இன்னொரு கேள்வி கேட்டுவிடத் தீர்மானித்தாள்! குப்பாயி! எனக்கு கேட்கவே வெட்கமாயிருக்கிறது! தவ றாக எடுத்துக் கொள்ளாதே! வீரமலையின் அறை எங்கிருக் கிறது? +4 அதோ... அரண்மனை முகப்பு வாயிலுக்கு அருகே; மாலை யில் உங்களை வரவேற்போமே, அந்த இடத்துக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது!" இந்தப் பதிலை சொல்லி விட்டு, குப்பாயி இளவரசியின் முகத்தைப் பார்த்தாள். இளவரசி இளநகை புரிந்தாள். "சரி! நீ போ குப்பாயி!' என்றாள். குப்பாயிக்கு இதயத்தில் பல மின்னல்கள்! கண்டதும் காதலா?" இப்படியொரு திடீர்க் ஒருவேளை பல நாள் காதலா?" பழகிப் போன காதலா?" அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கால்கள் ஒன்றையொன்று பின்னிட அந்த அறையிலிருந்து வெளியேறினாள். கேள்வி! .. - அல்லது 328