பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமலையை வீழ்த்தி 37 காதல் சற்றும் எதிர்பாராத வகையில் இளவரசி உதயநந்தினி அந்த நேரத்தில் தனது அறைக்குள் நுழைந்து நாணம் தலையைப் பிடித்து அழுத்திக் கவிழ்த்திட, ஒளியுமிழும் இரு விழிகளை மட்டும் மேலே தூக்கித் தன்மீது படர விட்டவாறு நிற்பதைக் கண்ட வீரமலை, என்ன இது? இந்த நேரத்தில்?" எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தான். ஏன்? வரக் கூடாதா?" என்று கேட்டுக் கொண்டே இளவரசி அங்கிருந்த தூணில் முகத்தை மறைத்துக் கொண்டு தனது வெட்கத்தை விளம்பரப்படுத்தினாள். 44 'எனக்கு ஒன்றுமே புரியவில்லை இளவரசி! திடீரென இங்கு எதற்காக வந்தீர்கள்?" என்றான் வீரமலை. ளவரசி, அவனுக்கு உடனே விடையளிக்கவில்லை. மேல் வாய்ப் பற்களை மெல்ல அழுத்திக் கீழ் உதட்டை கடித்துக் கொண்டே இடை நெளித்து அசைப்பு காட்டிக் கொண்டே தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டாள். வீரமலையும் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். ஏன்; நான் வந்தது பிடிக்கவில்லையா? போ என்று சொன் னால் போய் விடுகிறேன். "இல்லை இளவரசி; இந்த நேரத்தில் தங்களை யாராவது இந்த இடத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?" என்ன நினைப்பார்கள்? நான் உறையூர் இளவரசி! நீங் களோ வளநாட்டின் தளபதி! ராஜீய விஷயங்களைக் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொள்வார்கள்!' .. 330