பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "பொய் சொல்லாதீர்கள்! மாலையில் உங்களை நான் பார்த்த போதே உங்கள் மனம் எனக்குப் புரிந்து விட்டது! கண்ணும் கண்ணும் சந்தித்து விட்டால் வாய்ச்சொற்களால் எந்தப் பயனு மில்லை! ஒரு அழகிய காட்சி - ஒரு அற்புத ஓவியம் - பார்வையில் பட்டால் அவற்றைப் பார்ப்பது போலத்தான் இளவரசியையும் பார்த்திருப்பேன். அந்தப் பார்வைக்கு விபரீத அர்த்தம் எடுத் துக் கொண்டதற்கு நான் பொறுப்பாக முடியுமா? "அழகிய காட்சி என்பது என்ன? நீலவானம் அதிலே நீந்தும் நிலவு -அந்த ஒளி பொழியும் மணல்வெளி- அல்லது ஒரு அருவி அதன் பக்கமெல்லாம் மணம் வீசும் மலர்க்கொடிகள் ஆனந்தத் தென்றல் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டே அந்த இடத்திலேயே இருப்பதற்கு ஆசை தோன்றுவது இயற்கைதானே!' - ஆசை தோன்றும்; கவிஞனாக இருந்தால்!அல்லது காத லியை அங்கு தேடி வரும் காதலனாக இருந்தால்! நான் அப்படி யல்ல! கடமையை நிறைவேற்ற நடத்தும் பயணத்தில் காலில் படுவது முள்ளாக இருந்தால் எடுத்தெறிந்து விட்டுச் செல் கிறேன்! கண்ணில் படுவது மலராக இருந்தால் பார்த்துக் களித்து விட்டுப் போகிறேன்! அதைப் பறித்துப் போக வேண்டு மென்று கருதுவதில்லை!' 'அற்புத ஓவியம் என்றீர்கள்! அந்த ஓவியம் உயிர் பெற்று உங்களருகே ஓடி வரும் போது உதைத்துத் தள்ளி விட்டு ஒதுங்கி விடுவீர்களா?' 'எனக்கு மிகவும் வியப்பாகவும் இருக்கிறது! திகைப்பாகவும் இருக்கிறது! ஒரு நாட்டின் இளவரசி இன்னொரு நாட்டின் அதுவும் மிகச்சிறிய நாட்டின் சாதாரணத் தளபதி மீது இப்படி யொரு அன்பை இவ்வளவு வெளிப்படையாக, இவ்வளவு அவசரமாக வெளியிடுவது வேடிக்கையாகக் கூட இருக்கிறது!' .. - 'பல நாள் கஷ்டப்பட்டு பூமியைத் தோண்டி மிக ஆழத்தி லிருந்து கிணற்று நீர் எடுக்கிறோம்! அதிகம் தோண்டாமலும் சிரமப்படாமலும் ஆற்று மணலில் ஊற்று நீர் எடுக்கிறோம்! உடனே விரைவில் கிடைத்து விட்டது என்பதற்காக ஊற்று நீர் - 332