பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி ருசியில்லாமல் போய்விடுமா? ஒரு இருதய அன்பு எளிதில் கிடைக்கிறது என்பதற்காக அதனைக் குறைத்து எடை போட்டு விடலாமா?’ இவ்வளவு நேரம் நாம் பேசிக் கொண்டிருப்பது கூட பெரும் தவறு!" அரண்மனையே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது! யாரும் கவனிக்க மாட்டார்கள்! 14 'யாரும் கவனிக்காமலிருக்கலாம். ஆனால் என் மனசாட்சி என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறதே; அதை அலட் சியப்படுத்த முடியுமா? இதில் என் குற்றம் எதுவுமில்லை! நான் வந்தது என் னவோ குன்றுடையார் குடும்பத்தை உறையூர் விருந்தினர் களாக அழைத்துச் செல்வதற்குத்தான்! இடையில் உங்களைப் பார்த்ததால் வந்த வம்புதான் எல்லாம்! உறையூர் அரண்மனை யில் பொன்னரையும் சங்கரையும் பார்த்தேன். இங்கே வந்த வுடன் முத்தாயி, பவளாயி இருவரையும் பார்த்து என்னை யறியாமலே பொறாமை கொண்டேன். திடீரென உங்களைப் பார்த்தவுடன் அந்தப் பொறாமை ஓடிப் போய் விட்டது. முத்தாயிக்கும் பவளாயிக்கும் எதிராக என்னாலும் போட்டி போட முடியும் என்ற துணிச்சல் எனக்கு ஏற்பட்டு விட்டது! அப்படியொரு முடிவுக்கு என்னை அவசர அவசரமாக வரச் செய்தது, இதோ என் முன் நிற்கும் இந்த ஆஜானுபாகுவான உருவம்தான்! தேக்குமர தேகத்துக்குரியவராக நீங்கள் இல்லாம லிருந்தால் எத்தனையோ ஆண்கள் என் கண்ணில் படுவது போலத்தான் நீங்களும் பட்டிருப்பீர்கள்! கோயில் காளையின் திமிலைப்போல் உயர்ந்து நிற்கும் உங்கள் தோள்களில் சாய வேண்டுமென்று எந்தப் பெண்தான் ஆசைப்பட்டு உருக மாட் டாள்!" 'நீங்கள் இளவரசி! இப்படியெல்லாம் பேசக் கூடாது!" ளவரசியென்றால் அவள் இருதயம் மட்டும் தங்கத்தால் செய்து வைரம் பதிக்கப்பட்டிருக்கிறதா? அதெல்லாம் ஒன்று மில்லை! என் இருதயத்தில் பூஜை மாடம் கட்டப்பட்டு விட் டது! தயவுசெய்து அதில் ஒரு விக்கிரகமாகக் குடியேறுங்கள்!" என்று கூறிக் கொண்டே, வீரமலையின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் இளவரசி! என்ன செய்வதென்று அறி 333