பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் குழப்பம் 38 இளவரசியிருந்த அறைக்குள்ளிருந்து கதவைத் திறப்பதற் கான முயற்சியில் வீரமலை மிகத் தீவிரமாக ஈடுபட்டான். ஆனால் தாழ்ப்பாளைத் தொட விடாமல் அவள், அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டே; "அய்யோ! என்னைக் காப்பாற் றுங்கள்! என்று தொடர்ந்து அலறிய வண்ணமிருந்தாள். வீர மலை, ஆத்திரத்துடன் அவளைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்க முனைந்த போது அவன் நினைத்தபடி கதவு திறக்காமல் வெளியே வாணவரா யன் மாட்டிய பூட்டு தடுத்து விட்டது. ஏற்கனவே வாணவராயனின் ஊதுகுழல் ஒலி கேட்டு அரண் மனை வீரர்கள் அந்த அரண்மனை முழுதும் சிதறியோடிய சமயத்தில், வாணவராயனுடன் இளவரசிக்குப் பாதுகாப்பாக வந்த சோழ நாட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிப் பலத்த காயமுறச் செய்து வீழ்த்தினர். இதைக் கண்டு - வளநாட்டுப் பாதுகாப்புக்காக முன்னரே வந்திருந்த சோழ நாட்டு வீரர்கள் வியப்பும் திகைப்பும் கொண்டனர். வாணவராயனுடன் வந்த சோழ வீரர்களுக்கும் மாயவரால் அழைத்து வரப்பட்டிருந்த சோழ வீரர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் வளநாட்டு வீரர் கள்; பொதுவாக எல்லா சோழ வீரர்களுடன் மோதிச் சண்டை யிட்டனர். அதனால் வளநாட்டு உள் அரண்மனையிலும், கோட்டைக்குள்ளும் பெருங்குழப்பம் ஏற்பட்டது. அந்த இரு ளில் ஆங்காங்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்த தீப் பந்தங்களும் வாணவராயனின் ஆட்களால் தூக்கி எறியப்பட்டு அணைந்து விட்ட காரணத்தால் யார் யாருடன் போரிடு கிறார்கள் என்று தெரியாமலே ஒரே கூக்குரல் சப்தம் மட் டுமே அந்தக் கோட்டைக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. குன்றுடையான் கையில் வாளேந்திக் கொண்டு சில வீரர்கள் ஓங்கிய ஈட்டிகளுடன் பின் தொடர வேக வேகமாக இளவரசி யிருந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். 340