பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொன்னர்-சங்கர் 'எல்லோரும் சுகந்தான்' என்று முகத்தை வேறு பக்கம் திருப் பிக்கொண்டு பதிலளித்தான். 'அருக்காணி எப்படியிருக்கி றாள் அண்ணா?' என்று கேட்ட குப்பாயியின் முகத்தில் அந் தப் பாச உணர்வு பொழியும் காட்சியைக் கண்டு சங்கர் வியந்து போனான். 'அருக்காணி; உன்னை மீட்டு வருவதாகச் சூளுரைத்து வாளேந்திப் புறப்பட்டு விட்டாள்! நான்தான் அவளைத் தடுத்து அவள் ஏந்திய இந்த வாளையே வாங்கிக் கொண்டு உன் னைத் தேடிக் கிளம்பினேன்!' என் சங்கர் இவ்வாறு கூறியதும், குப்பாயியின் மேனி சிலிர்த்துப் போயிற்று! அந்த வாளை வெடுக்கென வாங்கி, அருக்காணி, அருக்காணிதான்! அடுத்த பிறவியென ஒன்று இருந்தால் அப்போதும் அவளுக்கு நான் தோழியாகவே பிறக்க வேண்டும்!' என்றவாறு வாளுக்கு முத்தமீந்தாள் 'சரி! சரி! வாளை முத்தமிட்டு வாயைக் கிழித்துக் கொள் ளாதே! ஏற்கனவே கன்னத்தில் வேறு காயம்!' காயம்!' என்றான் பரிவுடன் சங்கர்! ஆனால் குப்பாயி அதிர்ந்து போனாள்! அந்தக் காயம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பதில் ஏற்கனவே அவள் மனமொடிந்து நிலைகுலைந்து போயிருக்கிறாள்! அதனால் சங்கர். அந்தக் காயத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும் அவள் உள்ளத்தில் சூறாவளி வீசத் தொடங்கிவிட்டது. எங்கேயோ கல்லில் இடித்துக் கொண்டதால் ஏற்பட்ட காயம் என்றுதான் சங்கர் கருதியிருந்தான். ஆனால் அவளோ, அந்தக் காயம். தனது மானத்துக்குற்ற களங்கத்திற்கு நிரந்தரமான அடையாள வடுவாக் இருக்கப் போகிறது என எண்ணிக் குமுறினாள். 'உம்! குப்பாயி! புறப்படு!' என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் சங்கர்! அவளைத் தூக்கி குதிரையின் மீது - அவன் உட்காருமிடத்திற்கு முன்னால் அமர வைத்து அவனும் குதிரை யில் ஏறிக் கொண்டான். அந்தி சாய்ந்த அந்த நேரத்தில் காட்டு மரத்தழைகளையசைத்து வீசிய குளிர்ந்த காற்றில் சங்க ரின் குதிரை பரபரப்பின்றி வளநாடு நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. தலைநகருக்குள் சங்கரும் குப்பாயியும் வந்து சேர்ந்தபோது. ஆங்காங்கு மிக மங்கலாகத் தெரு விளக்குகள் எரிந்து கொண் 380