பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி பொன்னரும் சங்கரும் வரலாறு படைப்பார்கள் என்று சோழ மன்னர் அக்களதேவன் கூறியதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டுமென்று மாயவர் கூறியதை அந்த வீரர்கள் ஏற்றுக் கொண்டு கடந்த மூன்றாண்டுக் காலமாக வள நாட்டில் நல் லாட்சி நடத்துவதிலும் மெத்த ஆர்வமுடன் இருக்கிறார்கள்! ' அப்படியென்ன நல்லாட்சி நடத்துகிறார்கள்? வானம் பொழிந்தால், பூமி விளைந்தால் எல்லோருந்தான் நல்லாட்சி நடத்தலாம்! - அரச 'மன்னித்துக் கொள்ளுங்கள் அரசே! உண்மைகளைச் சொன் னால் ஒற்றன் வரம்பு மீறிப் போகிறானோ எனத் தவறாக எண்ணி விடாதீர்கள்! கடந்த மூன்றாண்டுகளில் வளநாட்டில் கூட தொடர்ந்த மழையில்லை! ஆனால் அதற்காக அங்கே வேளாண்மை பாழாகி விடவில்லை! ஆழமான கிணறுகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுக் தோண்டப்பட்டுக் கிணற்றுப் பாசனத்தைக் கொண்டு வேளாண்மையைப் பெருக்குகிறார்கள் குடும்பத்திலே உள்ளவர்களே உழவர் பெருங்குடி மக்களைப் போல உழைக்கிறார்கள். அருக்காணி தங்கத்திற்குத் தனியாக ஒரு பெரிய தோட்டமே இருக்கிறது. - பெரிய காண்டி கோயி லில் கவனிக்க வேண்டிய வேலைகளை கவனித்துவிட்டு, அருக் காணியும் ஏழு கன்னிகளும் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றை இறைத்துத் தண்ணீர் பாய்ச்சி உணவுப் பொருள் களை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். அரண்மனையில் உள்ள பெண்களே வேளாண்மையில் நாட்டம் செலுத்துவதைக் கண்டு அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருமே அர சின் உதவிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு உற்சாக மாக உழைக்கிறார்கள்.' உனக்கு இக்கரைக்கு அக்கரை பச்சையாகத் தெரிகிறது போலும்! நாமுந்தான் குடிமக்களுக்குத் தான தருமங்கள் செய் கிறோம். அந்தக் குடிமக்கள் நம்மை வாழ்த்தவில்லையா?' 'உண்மை நிலையை உரைக்க வேண்டியது ஒற்றன் கடமை! அரசரின் மனங்குளிர வேண்டுமென்பதற்காக முகஸ்துதி செய் வது ஒற்றனுக்கு அழகுமல்ல. இலக்கணமும் அல்ல! ஏதோ ஒரு நாள் அன்றைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகச் செய்யப் படும் தானதர்மங்களை நான் தடுக்கவில்லையென்றாலும், அது நமது குடிமக்களுக்கு நீண்ட காலத்துக்குத் தேவையான நிலை யான நல்ல வளமான வாழ்க்கையை அளிக்காது என்பது என்னைப் போன்ற பலருடைய தாழ்மையான கருத்து! வள 389