பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுத்த திட்டம் வாகை சூடுமா? 44 - அதனை தலையூர்த் தூதன் மூலம் அனுப்பப்பட்ட தலையூர்க் காளி யின் நீண்ட கடிதத்தை வீரமலை உரக்கப் படித்திட ஆலோசனை மண்டபத்தில் குழுமியிருந்த பொன்னர், சங்கர் மாயவர். சின்ன மலைக்கொழுந்து, வையம்பெருமான் ஆகி யோர் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தனர். மண்டபத்தின் ஓரப் பகுதியில் திரைச்சீலைக்கருகில் அருக்காணித் தங்கம், அவளது தோழிகளான கன்னிப்பெண்கள், முத்தாயி, பவளாயி ஆகி யோர் அமர்ந்து தலையூர்க் கடிதத்தில் தங்களின் முழுக் கவனத் தையும் செலுத்தியவாறு இருந்தனர். கடிதம், தலையூர்க் காளி யின் கையொப்பமிட்டு மாயவருக்கு எழுதப்பட்டிருந்தது. - - . - 'நடைமுறையில் தங்களுக்கும் எனக்குமிடையே கருத்து வேறு பாடுகள் பல நேரங்களில் ஏற்பட்டிருந்தாலுங்கூட, தலையூர் நாடு வளமாக இருக்க வேண்டும் தலையூர் மக்கள் நிம்மதி யாக வாழ வேண்டும் என்ற பொதுவான நல்ல எண்ணத் திற்கு எப்போதுமே நம்மிடையே குந்தகம் வந்தது கிடையாது. வேட்டுவர்களாகிய நமது மக்களும் கொங்கு வேளாளர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து மோதிக்கொண்டு அழிவதற் காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக யாராவது கருதினால் அது மலையளவு தவறு என்பதை நான் உணர்ந்தே இந்த மடலைத் தங்களுக்கு எழுதுகிறேன். வளநாட்டின் மீதோ, அதனை ஆளுகின்ற பொன்னர் சங்கர் மீதோ காழ்ப்பு கொண்டு பழி தீர்க்கும் வரையில் ஓய்வதில்லையெனத் தலை யூர் அரசு சபதம் செய்து கொண்டு செயல்படுவதாகத் தாங்கள் நினைக்கத் தேவையில்லை. பல்வேறு சூழல்கள் பல்வேறு காரணங்கள் இருநாடுகளுக்கிடையே பகையை அதிகமாக வளர்த்து விட்டன என்பதை நான் மறுப்பதற்கில்லை. குன்று டையார் செல்லாத்தாக்கவுண்டர் இருவரது குடும்பப் பகை யால் ஏதேதோ நடந்து விட்டது! எனது நிலையோ எனது புர வலராக என் தந்தை பெரியகாளி மன்னரால் நியமிக்கப்பட்ட - 395