பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி தலையூராயினும் வளநாடாயினும் மக்களின் நல்வாழ்வை மட்டும் முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துவதற்கேற்ப இனிய முடிவுகள் உருவாகிட பூர்வாங்கமாக நாமிருவரும் பேசுவதற் காகவே தங்களுக்கு இந்த அன்பழைப்பை விடுத்துள்ளேன். எனது தூதன் வாயிலாகத் தங்கள் வருகை குறித்த விபரம் தெரிவிப்பீர்களென நம்புகிறேன். " வீரமலை முகஞ்சுளித்தவாறு கடிதத்தைப் படித்து முடித்த வுடன் -"முடியவே முடியாது! பழிவாங்கப்பட வேண்டிய பகை யுடன் உறவா? தலையூர்க்காளி, செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பன் இவர்களுக்காக நான் ஓங்கிய வாள்; அந்த அரும்பணியை முடிக்கும் வரையில் உறைக்குள் புகாது! கிழித் தெறியுங்கள் தலையூரான் கடிதத்தை! அடடா... எப்படி இதோபதேசம் செய்திருக்கிறான்! வேங்கை, ரத்தங்கசியும் நாக் குடன் வேதாந்தம் பேசுவது போல!" என ஆர்ப்பரித்தெழுந் தான் சங்கர்! பொன்னர், அவனை அமைதிப்படுத்தி,"பொறுமையாக இரு சங்கர்! இந்தக் கடிதத்தின் உண்மையான நோக்கம் என்ன? திடீரென்று தலையூர்க்காளிக்கு அறிவோதயம் ஏற்பட்டது ஏன்? சூதுமதி கொண்டு தீட்டப்பட்ட மடலா? அல்லது நிலையுணர்ந்து எழுதப்பட்ட நேர்மை மிக்க வாசகங்களா? இதனை நம்மை விடச் சரியாக உணர்ந்து சொல்லக்கூடியவர் மாயவர்; அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்!" என்றான். 'நான் குறுக்கிடுவதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா!' எனக் கூறியவாறு மெல்லிய திரைச்சீலையை சிறி தளவு விலக்கிக்கொண்டு எட்டிப் பார்த்தாள் அருக்காணித் தங்கம்! அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அண்ணன் மார்களும் மாயவரும் மற்றவர்களும் ஆவலுடன் எதிர் நோக் கினர். மாயவருக்கு வந்துள்ள கடிதம் ஒரு மாயக்கடிதம்! இதில் ஏதோ சூழ்ச்சி, நிச்சயமாக இருக்க வேண்டும்! என்னையே அபகரிக்கத் திட்டமிட்டு என் தோழி குப்பாயி உயிருக்கே உலைவைத்த தலையூரான்தானே எவளோ ஒரு எவளோ ஒரு வேசியை சோழநாட்டு இளவரசி போல ஜோடித்து இங்கே அனுப்பிய வன்! இன்று சமாதான விரும்பி போல நடிக்கும் அந்தச் சண்டாளன்தானே எனது அண்ணன்மார் இருவரையும் குழந் 397