பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் தைப் பருவத்திலேயே கொல்லத் திட்டமிட்டவன்! குலகுருவாம் ராக்கியண்ணரின் தியாகத்தை மறந்துவிடப் போகிறோமா? அவர் செய்துள்ள சபதத்தைக் குப்பையில் போட்டுவிட போகி றோமா? இன்னும் பல ஆண்டு காலம் வாழவேண்டிய நமது தாய் தந்தையரை யாரால் இழந்தோம்? தலையூர்த் தளபதியி னால் அல்லவா? இன்றைக்கு அவன் இச்சகம் பேசுகிறான் நாடு என்கிறான் - நாட்டு மக்கள் என்கிறான் நாட்டு மக்கள் என்கிறான் - அந்தச் சகுனி மனிதர் செல்லாத்தாக் கவுண்டரையும் மனிதப் பிறவியே அல்லாத மாந்தியப்பனையும் தன்னருகே வைத்துக்கொண்டு தலையூரான் பேசும் அமைதி வழியில் ஏமாந்தால் அது நம்மை ஆபத்தான வழியில் கொண்டுபோய்த் தள்ளி விடும்!" -> அருக்காணித் தங்கம் படபடவெனப் பொறிந்து தள்ளி னாள். தங்கையின் வீர உணர்வு கண்டு, பொன்னர் புன்னகை புரிந்தான். சங்கர் கண்களில் கனலும் புனலும் சேர்ந்து எழுந்தன!. 'தங்கம்! என என அன்பு ததும்பத் தங்கையை அழைத்துக் கொண்டே அவளருகே சென்றான் பொன்னர்! அண்ணன் தன்னருகே வந்ததால் ஆத்திரம் தணிந்து விடவில்லை. அருக் காணிக்கு! தலையூரான் சூதாக கடிதம் எழுதியிருந்தால் அதில் போய் சிக்கிக்கொள்வது தீது என்பதுதான் அவள் முடிவான கருத்து!, "தங்கம்! நடந்தவைகள் எதையும் நான் மறந்துவிடவில்லை! தலையூர்க் காளி மன்னன் நேற்று வரையில் துரியோதனனாக இருந்தவன் இன்றைக்குத் திடுமெனத் தர்மராக மாறிவிட்டான் என்றும் நம்பவில்லை! ஆனால் ஒன்று; இப்போது எழுதப் பட்டுள்ள கடிதம் - தலையூர்க்காளி என்ற தனிப்பட்ட ஒருவன் மாயவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதியதல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!" 'ஆம் அண்ணா! அவன் மாயவருக்குத்தான் எழுதியிருக் கிறான்!" 'உண்மைதான்! ஆனால் அதில் எழுதப்பட்டிருப்பது இரு நாடுகளுக்குரிய பிரச்சினை! .. அதனால்? $1 அதனால் அமைதியாகச் சிந்திக்க வேண்டும் தங்கம்! நமது வளநாடு பொன்னர் - சங்கரின் ஆட்சியைப் பெற்றுள்ளது என்றாலும் இந்த ஆட்சியின் மூளையாகவே இருப்பவர் நமது 398 1