பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்றியுடன் பண்பாளர் நடத்திய போர் 45 செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் சேர்ந்தமர்ந்து சிந்தித்து வகுத்த திட்டம்தான் என்ன? 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்ற குறள் மொழிப்படி - குறை கண்ட இடத்து இடித்துச் சொல்லி குற் றம் நிகழாதவாறு தடுத்திடுகிற சான்றோர் அமையப் பெறாத ஒரு அரசனோ அல்லது அரசோ, அழிப்பதற்கு யாரும் இல் லாமலேகூடத் தானாகவே அழிந்து விடும் என்கிறபோது, குறையேற்படுமளவுக்கு நடந்து கொண்டோமே என்று கோலேந் திய மன்னன் உணர்ந்திடும்போது அந்தக் குறையை மலைகளா கக் குவித்துக் குற்றங்கள் மலிந்த "கொற்றம்" என்ற நிலையை ஏற்படுத்தித் தங்கள் தன்னலத்திற்காகக் குளிர் காய்வதற்குத் திட்டம் தீட்டுகிற தீயவர்கள் எந்தக் காலத்திலும் இருப்பா ரன்றோ! குறைபாடுகளிலிருந்து மீள எண்ணுகிறவனைச் சுற் றிக் கொண்டு அவனை அதிலிருந்து எழவொட்டாமல் கனிவா கப் பேசியும் கசிந்துருகிப் பணிவிடை செய்தும் கழுத்தைப் பிடித்து அழுத்தி விடும் அந்தக் கயமைத்தனங்கொண்டோர் மனித குலத்தின் கரும்புள்ளிகளாகக் காட்சியளித்துக் கொண்டு தானேயிருக்கின்றனர்! - அந்த மனிதர்களுக்கு வேண்டியது தங்களின் சுகபோகம் தமது சுற்றத்தார் இன்ப வாழ்வு அதற்கு ஏணியாகப் பயன் படுகின்றவர் எவரோ, அவரை ஏற்றிப் போற்றித் துதித்துத் தொழுவது போல பாசாங்கு செய்துகொண்டே - எப்போது ஏறிய அந்த ஏணியினை எட்டி உதைத்துத் தள்ளலாம் என்ற சூதுமதியைக் கூர்மையாக்கிக் கொள்கிற சாதகச் சூழ்நிலைகளே தான்! அத்தகைய ஒரு சாதகச் சூழ்நிலை இப்போது செல்லாத்தாக் கவுண்டருக்கும் அவர் மகன் மாந்தியப்பனுக்கும் வாய்த்துள்ள போது - அவர்களால் பேசாமல் இருக்க முடியுமா? தூசி எது 403