பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் அந்தக் காட்டுப் பன்றியுடன் நூறு பன்றிகள் எப்போதும் இருக்கும். எல்லாப் பன்றிகளுக்கும் காளி மன்னனின் வளர்ப் புப் பன்றிதான் ராஜா. அந்தப் பன்றி எங்கே சென்றாலும் மற்ற நூறு பன்றிகளும் பின்தொடரும். ராஜ விசுவாசமில் லாத விவசாயி என்று யாராவது குற்றம் சாட்டப்பட்டால் உடனே அந்தப் பன்றிகளைச் செம்பகுலன் அந்த விவசாயி வளர்க்கும் பயிர்களின் மீது ஏவி விடுவான் ராஜா பன்றி யின் தலைமையில் நூறு பன்றிகளும் அந்தப் பயிர் பச்சை களை நொடியில் அழித்து நாசம் செய்து விட்டுத் திரும்புவது வாடிக்கை! இது அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு வேடிக்கை! - செல்லாத்தாக் கவுண்டர் செம்பகுலனைத் தயார் செய்து அவனது மேற்பார்வையில் பன்றிகளை மாயவர் வரும் வழி யில் தனது திட்டத்தை நிறைவேற்ற அனுப்பி வைத்தார். செம்பகுலன் இரவோடு இரவாக பன்றிப் படையை தலை யூருக்கும் வளநாட்டுக்குமிடையே மதுக்கரை பகுதிக்குக்கொண்டு சென்றான். மறுநாள் காலையில் தலையூர் வந்து சேர்வதாக இருந்த மாயவரை வரவேற்று உபசரிக்கக் காளி மன்னன் விரைவாக எழுந்து, தயாராகிக் கொண்டிருந்தான். மாயவர் வந்ததும் காளி கோயில் பூஜைக்குப் போக வேண்டுமே என்பதற்காக எல்லாம் தயாராக இருக்கிறதா எனக் கேட்டறிவதற்கு செம்ப குலனை அழைத்து வரச் சொன்னான். அழைக்கச் சென்ற வீரன், திரும்பி வந்து அரசனின் வளர்ப்புப் பன்றியும் அத னுடன் இருந்த பன்றிகளும் இரவு கொட்டடியிலிருந்து ஓடி விட்டதாகவும் அவைகளைத் தேடி செம்பகுலன் போயிருப்ப தாகவும் செய்தி சொன்னான். வியப்புற்ற காளி மன்னனைப் பார்த்து, செல்லாத்தாக் கவுண்டர் நமது நாட்டுப் பஞ்சம், பன்றிகளுக்குக் கூடச் சரியான தீனி இல்லை. அவைகள் கட்டுமீறிப் புறப்பட்டு எங்கேயாவது பயிர்ப்பச்சை களை நாடிச் சென்றிருக்கும் என்று சமாளித்தார். - - அதனால் அவர் சொன்னபடி அந்தப் பன்றிக் கூட்டம் மதுக்கரைக் கருகில் உள்ள பயிர்களை நாசம் செய்து கொண்டுதான் இருந் தது. அமராவதி நதியின் கிழக்குக் கரைக்கும் மதுக்கரைக்கும் இடையில் உள்ள பகுதிகளில் ஓரளவு வளர்ந்திருந்த பயிர் நிலங்களில் பன்றிகள் புகுந்து வெறியாட்டம் நடத்திக் கொண் டிருக்கும் பொழுதுதான் அந்த வழியாக மாயவர் இருந்த ரத வண்டியும் வந்தது. அதை வீரமலைதான் ஓட்டிக் கொண்டு வந்தான். ரத வண்டிக்கு இருபுறமும் இரு குதிரை வீரர்கள் 408