பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அண்ணா பொன்னர் வந்தவுடன் நானும் வையம்பெருமானும் தலையூர் மீது படையெடுத்துச் செல்வதையும். இது தவிர்க்க முடியாதது என்பதையும் விளக்கிடு!" என்றான். அருக்காணித் தங்கம் அவனை நோக்கி, "சின்னண்ணா! முதலில் வெள்ளாங்குளம் போய் பெரியண்ணாவைப் பார்க்க லாமே!" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். அதற்குள் வையம்பெருமான் குறுக்கிட்டு, "வெள்ளாங்குளத்துக்குத்தான் இதேபோல் ஒரு படையுடன் என் தந்தை சென்றிருக்கிறாரே; அதனால் நாம் போகத் தேவையில்லை! எனக்குத் தெரிந்தவரையில் இப்போது நாம் தலையூர் மீது படை கொண்டு செல்வதே முக்கியம்!" என்றான். 44 'அதுவே சரி! அருக்காணி! நீயும் உன் தோழிகளும் வள நாடு திரும்புங்கள் நாங்கள் வெற்றியுடன் திரும்புகிறோம்!' என்றான் அனல் வீசும் விழிகளுடன் சங்கர்! மண்டபத்தில் நிகழ்த்திய போரில் எதிர்த்தரப்பு வீரன் ஒரு வனது வாள் முனை பட்டு அவளது விரலில் வழிந்து கொண் டிருந்த ரத்தத்தை அருக்காணி அப்போதுதான் பார்த்தாள். அந்த விரலையே சங்கரின் நெற்றியில் அழுத்தி அவனுக்கு ரத்தத் திலகமிட்டு வழியனுப்பினாள். - அருக்காணியும் அவளது தோழிகளும் வளநாட்டுக்கு வரும் வழியில் வந்து கொண்டிருக்கும்போதே சின்னமலைக் கொழுந்தும் அவர் வழிநடத்திச் சென்ற படைகளும் வெள் ளாங்குளம் ஏரியை நெருங்கி விட்டன. ஆனால் ஏரிக்கரையில் சில நூறு வீரர்களுடனும், வளநாட்டுப் பொற்கொல்லர்களுடனும் நின்றுகொண்டிருந்த வளநாட்டுப் துணைத்தளபதியொருவன், சின்னமலைக்கொழுந்து கவுண் டருக்கு முன்னால் வந்து நின்று, அதற்குமேல் போக வேண் டாம் என்பது போல மிக்க மரியாதையுடன் சைகை காட்டி னான். "ஏன் எங்களைத் தடுக்கிறாய்? பொன்னர் எங்கே? இதெல் லாம் என்ன கூத்து?" என்று சற்று ஆத்திரத்தோடு வினவி னார் சின்னமலைக்கொழுந்து! 469