பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி "யார் தூண்டிவிடுவார்கள்? இந்த ராஜ்யத்தை அபகரிக்க வேண்டும் தானொருவனே ஏகச் சக்ராதிபதியாக வேண்டு மென்று யார் துடிக்கிறாரோ? - அவர்தான் என்னை இந்தக் காரியத்துக்கு அனுப்பினார்!" 41 இன்னும் ஏன் அந்த ரகசியத்தை இருட்டில் போட்டுப் பூட்டி வைக்கிறாய்? திறந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வா!" "சொல்லுகிறேன் மன்னா! ஆனால் எப்படிச் சொல்வ தென்று புரியவில்லை இதோ பாருங்கள் என் திரேசுமெல் லாம் நடுங்குகிறது!" - "இப்போது சொல்லப் போகிறாயா? இல்லையா?' "சொல்லுகிறேன்! சொல்லுகிறேன்!" என்று நடுங்கிக் கொண்டே கூறிய செம்பகுலன் பொன்னரால் கீழே வீசப் பட்ட வளைந்து போன வாளைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு "அரசே! அந்த ரகசியத்தைக் கூறிய பிறகு நான் ஒரு நொடிப் பொழுதும் உயிரோடு இருக்க முடியாது! அப்படி இருந்தால் என்னைச் செங்கல் சூளையிலே போட்டு தங்களின் தம்பி சங்கர் வேகவைத்துவிடுவார்!" என்று கதறிக் கதறியழு தான். .. என் தம்பி எதற்காக உன்னைச் சூளையில் வேகவைக்க வேண்டும்? என்று பொன்னர் கேட்கவே, செம்பகுலன். வளைந்த வாளைக் கையில் பிடித்தபடியே அரசே! ஏனடா அந்த ரகசியத்தை வெளியிட்டாய் என்று என்னைச் சங்கர் உடனே தண்டித்தே தீருவார்!" என்று உரக்கக் கூவினான். 44 - 'அவன் தண்டிக்கிறானோ இல்லையோ, இப்போது நான் உன்னைத் தண்டித்து விடுவேன்! உண்மையை உடனே சொல்! என்ன ரகசியம் அது? யார் உன்னைத் தூண்டியது?' 1+ 'அண்ணன் பொன்னருக்கும் தனக்கும் வளநாடு ராஜ்யம் ஆளுக்குப் பாதி பாதியாக இருக்கிறது! அண்ணனைத் தீர்த்துக் கட்டிவிட்டால் ராஜ்யம் முழுதும் தனக்கே வரும் என்று திட்டமிட்டுத் தங்கள் தம்பி சங்கர் என் மூலம் இந்தச் சதியை வகுத்தார்!' .. செம்பகுலன் சங்கர் பெயரைச் சொன்னவுடன் ஆ! என் தம்பியா இப்படி?" என்று பொன்னர் அதிர்ச்சி அடைய வில்லை. தம்பியின் இதயத்தில் தனக்கெதிரான துரோகச் சிந்தனையைத் திணிப்பதற்குக் கடவுளால் கூட முடியாது 473