பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி எரிவது கண்டு முத்தாயியும் பவளாயியும் பதைத்தனர். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். 44 வளநாட்டுக் கோட்டைக் கொடியின்மீது படர்ந்த தீயின் ஜுவாலை அப்படியே முழுமையாக முத்தாயியின் விழி களிலே பரவியது போல அவளது கண்கள் செவ்வானத் தோற்றம் கொண்டன. பவளாயி! நாம் செய்யக்கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது! எதிரிகளின் சதியினால் என் னுடையவரும் உன்னுடையவரும் எப்படியோ ஏமாற்றப்பட்டு விட்டார்கள்! ஆனால் ஒன்று - அவர்கள் எப்படியும் திரும்பி வருவார்கள்! தங்களின் வீரத்தை நிலைநாட்டுவார்கள்! அதில் சந்தேகமே இல்லை! ஆனால் அவர்கள் வரும்போது அவர்கள் முகத்தில் விழிப்பதற்குத் தகுதியுடையவர்களாக நாம் இருப் போமா என்பதுதான் சந்தேகத்திற்குரியது! பகைவர்கள் நமது அரண்மனைக்குள் நுழைந்துவிட்டாலே நம்மிருவரின் மான மும் பறிக்கப்பட்டுவிட்டதாகத்தான் அர்த்தம்! அதனால்... அதனால்...' என்று-ஏதோ சொல்ல வந்த முத்தாயி, பேச நா எழாமல் திக்குமுக்காடி நின்றாள். - அதனால் என்ன செய்யலாம்? எதற்கும் நான் தயார் அக்காள்! என்று பவளாயி, தனது சகோதரியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள். 44 - தங்கையின் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே முத்தாயி கவலைப்படாதே! இதோ நான் கண்டு பிடித்துவிட்டேன் வழி! நமது வளநாட்டுக் கோட்டையும் பகைவர்கள் கையில் சிக்கக் கூடாது நமது மானமும் அவர்களுக்கு முன்னால் சோத னைப் பொருளாக ஆகிவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி, இதுதான்! என்று சொன்னவள் திடீரெனப் பாய்ந்து தூணில் சொருகப்பட்டிருந்த தீப்பந்தத்தை எடுத்தாள். இமைகொட்டித் திறக்கும் வேகத்தில் அங்கு தொங்கிக்கொண்டிருந்த திரைச் சீலைகளுக்குத் தீயிட்டாள். ஒன்றா? இரண்டா? அரண்மனை முழுதும் அழகுறத் தொங்கித் தென்றலில் தவழ்ந்தாடிய நூற் றுக்கணக்கான திரைச் சீலைகளில் தீயின் தாண்டவம்! அவை அனைத்துக்கும் அவளே தீயிட்டாள்! அரண்மனையின் எல் லாப் பகுதிகளிலும் பரவிய தீ கோட்டையிலும் பரவியது! அரண்மனையைச் சூழ்ந்து கொண்டிருந்த தலையூர் வீரர் களால் அனல் தாங்க முடியவில்லை! பின்னோக்கி நகரத் தொடங்கினர். அரண்மனை மட்டுமன்றி கோட்டைக்குள்ளும் புயல் வேகத்தில் சென்ற தலையூர்ப் படை, வான்முட்ட எழுந்த 481