பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 'ஏன்? ஏன்?" என்று என்று பதில் கூச்சல் போட்டாள் அருக் காணித் தங்கம்! அந்தப்புர அரண்மனைக்குத் தீ வைத்துவிட்டு உன் அண்ணி யார்கள் இருவரும் அந்த அரண்மனைக்குள்ளேயே சுண்களை மூடி க்கொண்டு தபசிகளைப் போல அமர்ந்து விட்டனர். நான் அவர்களிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். என்னோடு வாருங்கள், தப்பித்து ஓடி விடலாம் என்று மன்றாடினேன். ஆனால் அவர்கள் அரண்மனையை விட்டு வெளியே வந்தால் பகைவர்களின் கையில் அகப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி னார்கள். அதனால் என் வார்த்தைக்கு அவர்கள் செவி சாய்க் கவே இல்லை. வேறு வழியில்லை எனக்கு! வெளியில் யாரா வது நமது வளநாட்டு வீரர்கள் இருக்கிறார்களா என்று பார்ப் பதற்கு ஓடி வந்தேன். யாருமே இல்லை. எல்லோரும் பிணங்க ளாகத்தான் இருந்தார்கள். திரும்பவும் அரண்மனைக்குள் ஓட முயன்றேன். முடியவில்லை. அரண்மனை வாசல்கள் அனைத் தையும் அடைத்துக்கொண்டு தீ எரியத் தொடங்கி விட்டது! அருக்காணீ, அந்தக் கண்ராவியை நான் எப்படிச் சொல்வேன்! முத்தாயி, பவளாயி இருவரும் கும்பிட்டகைகளை எடுக்காமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அந்த நெருப்பில் வெந்து சாம்பலானதை இந்தப் பாழும் கண்களால் பார்த்தேனடி!' என்று அலறிக்கொண்டே தனது முகத்தில் மாறி மாறி அறைந்து கொண்டாள் அந்தத் தோழி! அண்ணியார் இருவரையும் இழந்துவிட்ட துயரம் - அவர்கள் முடிவுக்குக் காரணமாகிவிட்ட பகைமையைப் பழி வாங்க வேண்டுமென்ற உணர்ச்சி - ஒன்றோடொன்று போட்டியிடும் நிலையில் அருக்காணித் தங்கம், தனது தோழி தன் முகத்தில் அறைந்து கொள்வதை தடுத்திட அவளது கைகளிரண்டையும் அழுத்தமாகப் பற்றினாள். அருக்காணியின் கைகளோடு சேர்ந்து அவள் தோழி வதங்கிப்போன கீரைத் தண்டு போலக் கீழே சாய்ந்தாள். - - உள்ளே தீயோடு தீயாகக் கலந்து கரைந்துவிட்ட அண்ணி யார்கள்- அய்யோ!. அவர்கள் மணமானவர்கள்! ஆனால் வாழ்வின் மணம் இன்னதென்றே உணர்ந்தறியாதவர்கள் அந்த மலர்கள் தணலில் கருகிவிட்ட செய்தி அறியாமல் தனது அண்ணன்மார்கள் சபதம் நிறைவேறும் வரையில் சதிபதி களாக வாழ்வதில்லையென்று உறுதி எடுத்தவர்கள் இனி அந்தச் சாம்பல் மேடுகளைத்தான் தழுவிட வேண்டும் - அருக் காணித் தங்கமே இப்போது நெருப்பானாள்! அவள் காலடி யிலே அவளது ஆருயிர்த் தோழிகளில் ஒருத்தியின் பிணம்! - 485