பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் தனது திறமையிலும் போர்த்தந்திரத்திலும் தலையூர்க் காளி அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதறிந்த செல்லாத்தாக் கவுண்டர், தன் மனதிற்குள்ளாகவே ஒரு மமதை நிறைந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார். அவர் சொல்லப் போகும் யுத்த முறை என்ன என்பதைத் தலையூர்க்காளி மிக மிக உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டு அவரையே இமை கொட்டாமல் நோக்கினான். காளி மன்னா! சங்கரின் புஜபல பராக்கிரமத்தைக் குறைத்து எடை போடாமல், அவனைத் தந்திரத்தால் வெல்லவேண்டு மென்று திட்டமிட்ட உனது அறிவுக்கு என் வாழ்த்துக்கள்! இராமாயணத்தில் வாலியை நேருக்கு நேராக நின்று வதைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட இராமன் என்ன செய் தான்? தனது வீரத்துக்கும் யுத்த தர்மத்துக்கும் இழுக்கு ஏற் படுமேயென்று கவலைப்படாமலே மறைந்திருந்து வாலியைத் தாக்கி அவனைக் கொன்றான்! மகாவிஷ்ணுவின் அவதார மெனப்படும் இராமச்சந்திர மூர்த்தியாகிய நீயே மறைந்திருந்து என்மீது அம்பு எய்தி என்னை மாய்த்தது நியாயமா என்று வாலி கேட்டபோது, இராமன், தனது செயலுக்கு ஏதோ ஒரு காரணம் கூறவில்லையா? யுத்த தர்மம் தவறவில்லையென்று வாதிடவில்லையா? தெய்வத்தின் திருஅவதாரமான இராமனே யுத்த களத்தில் சூழ்ச்சி முறையைக் கடைப்பிடித்திருக்கிறபோது சாதாரண மானுடர்களாகிய நாம், சூழ்ச்சித் திறனால் பகையை முறியடிப்பது பாபகாரியமல்ல! தர்மம் நியாயம் என்றெல்லாம் அடிக்கடி உன் நெஞ்சத்தில் உருவாகும் குழப்ப அலைகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு கட்டித்தான் ஆக வேண்டும்! - செல்லாத்தாக் கவுண்டர், உபதேச காண்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்டு விட்டதை உணர்ந்த காளி மன்னன், இடை மறித்து, "இப்போது உடனடியாக என்ன செய்யலாம்? அதைச் சொல்லுங்கள்! என்றான் சற்று சலிப்புடன்! "வாள் வீச்சிலும், ஈட்டி எறிவதிலும், நேர் நின்று போர் புரிவதிலும் வள நாட்டு வீரர்கள் வல்லவர்கள்! ஆனால் தொலைவிலிருந்து வில்லில் கணை பூட்டி எதிரிகளை வீழ்த் தும் போர் முறையில் நமது தலையூர் வீரர்களே சிறந்தவர் கள்!' என்று தனது சூழ்ச்சிப் புலமைக்கான முன்னுரையை ஆரம்பித்தார் கவுண்டர்! 490