பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் "நமக்குள் ஒரு சமாதானம் செய்துகொள்ளலாம்" என்று செல்லாத்தாக் கவுண்டர் மேலும் புதிர் போட்டார். "போர் நடப்பது சங்கருக்கும் தலையூர்க்காளிக்கும்! அவர்க ளிருவரும் ஒப்புதல் தராமல் நமக்குள்ளே எப்படி ஒரு தனி சமா தான ஒப்பந்தம் ஏற்பட முடியும்?" என்று வீரமலை கேட்டான். 'சங்கருக்கும் தலையூர்க்காளிக்கும் தமது வீரர்கள் அழி வதைப் பற்றிக் கவலையில்லை. அவர்களது கௌரவம், குலப் பெருமை இவைகளைக் காப்பாற்றிக்கொண்டால் போதும். நமக்கேன் இந்தத் தேவையில்லாத சிக்கல்? நானும் என்மகன் மாந்தியப்பனும் எங்கள் பின்னால் உள்ள வீரர்களுடன் உங் கள் படையுடன் இணைந்துவிடுகிறோம். சங்கருக்கும் காளிக் கும் நடைபெறும் போரில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்கள் பக்கம் நாம் சேர்ந்துவிட்டால் பிறகு எந்தக் கவலையுமில்லை! என்ன சொல்லுகிறாய் வீரமலை? என்று பழம் நழுவிப் பாலில் விழுவது போல பசப்பினார் செல்லாத்தாக் கவுண்டர்! 14 அய்யா! தாங்கள் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட் டீர்களா? குறைந்தபட்சம் இந்த உலகத்தில் ஒரே ஒரு மனிதன் நீங்கள் இதயசுத்தியோடு விசுவாசம் காட்ட வேண்டியவன் தலையூர்க்காளி! அவன் எவ்வளவோ பரவாயில்லை. தங்களின் தர்மவிரோதமான காரியங்களையெல்லாம்கூட அவன் தாங் கிக்கொண்டு, தங்களிடம் நன்றி விசுவாசம் காட்டி இப்போது அழிந்துகொண்டிருக்கிறான். அவனையும் ஆபத்தில் கைவிடு கிறேன் என்றும் ஜெயிப்பவர் பக்கம் சேருவோம் என்று எங்க ளையும் துணைக்கு அழைக்கிறீர்களே. உங்கள் பாதம் பட்ட இடத்தில் இருக்கும் பசும்புல்கூட கருகிப் போய் விடுமய்யா! என்றான் வீரமலை ஆத்திரம் கொப்பளிக்க! உணர்ச்சி கொந் தளிக்க! சமாதானப் பேச்சிலும் ஒரு சதி மறைந்திருந்த காரணத்தி னால் வீரமலையும், வையம்பெருமானும் செல்லாத்தாக் கவுண் டருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாந்தி யப்பன் - கீழே தாழ்த்தி வைத்திருந்த தனது வாளை ஓங்கி வீரமலையை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்திட வீரமலையை நோக்கிப் பாய்ந்தான். இதுபோன்ற ஒரு விபரீதத்தை எதிர்பார்த்திருந்த வையம்பெருமான் வீரமலைக்கு முன்னால் திடீரெனப் பாய்ந் தோடி தனது வாளால் மாந்தியப்பனின் வாளைத் தட்டிவிடும் நோக்கத்தோடு சீறிப்பாய்ந்தான். அந்த வேகத்தில் மாந்தி யப்பனின் வாள் மட்டுமல்ல, அந்த வாளைப் பிடித்திருந்த 502