பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் என்பதாகக் கலிங்கத்துப் பரணியில் வில்லில் இருந்து புறப் படும் கணைகளால் அந்த நாண் ஓசையால் திக்குகள் பிளந் தன என்றும், குதிரைகளை ஏவுக! யானைகளை ஏவுக! என்ற போர்க்களத்து ஆணைகளால் உலகம் செவிடுபடுகின்றன என்றும், ஜெயங்கொண்டார் குறிப்பிட்டது போல வீரப்பூர் பகுதியே படுகளமாயிற்று! தங்களின் வாய்களில் புகுந்துவிட்ட வேல்களைக் கைகளால் இழுத்தெடுப்பதற்காக முயற்சித்துக் கொண்டே களத்தில் விழுந்து கிடக்கும் வீரர்களைப் பார்த் தால் அவர்கள் ஊது கொம்பு ஊதுவது போலத் தெரிகிறது. என்று வர்ணிக்குமே, கலிங்கத்துப் பரணி அதுபோன்ற காட்சிதான் வீரப்பூர் படுகளத்தில்! - இதன் முடிவுதான் என்ன? சங்கரின் துடிப்பும் வீரமும் மிகுந்த தாக்குதலைத் தலையூர்க் காளியினால் நேருக்கு நேராக நின்று சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பின் னோக்கிச் செல்வதுபோலப் பாவனை செய்து மீண்டும் ஒரு மலைப்பாறையில் மறைந்து கொண்டான். அப்போது வீர மலையும் செல்லாத்தாக் கவுண்டரும் போர் நிகழ்த்தும் இடத் தில் ஒரு பெரும் ஒலி! போரில் செல்லாத்தாக் கவுண்டர் வீரமரணம் அடைந்ததையொட்டி, தலையூர் வீரர்கள் களத்தை விட்டு ஓடத்தொடங்கினர். அந்த ஒலி முழக்கம் தலையூர்க் காளியைக் கிறு கிறுக்கச் செய்துவிட்டது. வீரமலையின் கையில் வெற்றிக்கொடி ஓங்கி உயர்ந்துவிட்டது கண்ட சங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; தன்னை மன்னன் என்பதையும் வீரமலை அவனது தளபதி என்பதையும் மறந்து; சங்கர் தளபதி வீரமலை வாழ்க!" என்று இதயம் திறந்து வாழ்த்து முழக்கமிட்டான். வளநாட்டுப் படைவீரர்கள் அனைவரும் வாழ்த்தினர்! அந்த மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திடையே ஒரு பெரும் அதிர்ச்சி! பாறைச்சரிவில் மறைந்திருந்த தலையூர்க் காளி நாணேற்றி விடுத்த அம்பு, சங்கரின் நெற்றியில் தாக்கி யது! சங்கர் நெற்றிப் பொட்டில் தாக்குண்டதால் குதிரையி லிருந்து தலைகுப்புற வீழ்ந்தான் வீரமலை ஓடோடி வந்து சங்கரைத் தூக்கிக் கொண்டான். -> பகழி = அம்பு

  1. வார்சிலை =

வளைந்த வில் 504