பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி தனித்துப் பிறந்த அண்ணா தனியொருத்தி வேறுபட்டேன்! தண்ணீர்த் துறையிலேதான் அண்ணா தனிப்பிரிந்த மானது போல் உங்களைப் பிரிந்து அண்ணா உயிர் துடித்து வாழ மாட்டேன்! தங்கம் நல்ல தங்கம் இனித் தவிதவித்து வாழ மாட்டேன்!' - - அருக்காணித் தங்கத்தின் உள்ளத்தில் ஏதோ ஒரு உறுதி சின்ன ஆம் இனி வாழத் தேவையில்லை என்ற உறுதி அண்ணன் சங்கரை இழந்துவிட்டதற்கு யார் வந்து என்னதான் ஆறுதல் கூறினாலும் - அந்த இனிய சகோதரனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவளது இதயம் வலிமை வாய்ந்ததாக இல்லை! அதைவிடத் தனது உயிரைப் போக்கிக் கொள்வதில் அவள் தைரியமாக இருந்தாள். எனவே அந்த உறுதிதான் அவளது மனத்தில் எந்த சக்தியாலும் அசைக்க முடியாத பலம் பெற்றுப் பேருருக் கொண்டது. பாறையில் பட்டு விரித்து அமர்ந்து மானமறவன் என்பதை விளக்க மார்பை நிமிர்த்தித் தனது போர்வாளுக்குத் தன்னுயி ரைப் பரிசாக அளித்துவிட்ட சங்கர் சவமாகப் படுத்திருக்கும் அந்தக் காட்சி அருக்காணித் தங்கத்தை அளவுக்கு மீறி உருக்கி விட்டது. அஞ்சடுக்குப் பஞ்சு மெத்தை சின்னண்ணா, உனக்கு அது மேல் தூளி மெத்தை! பஞ்சு மெத்தை மேலிருக்க அண்ணா நீ மெத்தை அழுந்துதென்பாய்! மெத்தை அழுந்துதென்பாய், உன்மேனியெல்லாம் நோகுதென்பாய்! நித்திரையும் வல்லை யென்று அண்ணா நீ நிட்டூரம் சொல்லுவாயே! பூமியிலே சவமிருந்தால் மேனியிலே புழுதி பாறைமேல் பட்டு வைத்து அண்ணா 4 அணையுமென்று அதன்மேல் பாங்காக மண்டியிட்டு, கல்லின் மேல் பள்ளி கொண்டு அண்ணா நீ கண்ணுறக்கம் ஆனாயோ? நல்லதங்கம் அருக்காணியின் புலம்பலினூடே குதிரைகள் பல விரைந்து வரும் குளம்படி ஓசை வீரப்பூர் படுகளத்தை மேலும் அதிரச் செய்தது. தொலைவில் வரும் குதிரைகளின் 531