பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கலைஞர் மு. கருணாநிதி உள்ள அன்புப் பிணைப்பை நீ அறிய மாட்டாய்! போ; போய்ச் சொல்; மாயவர் வந்திருக்கிறார் என்று!" எனப் பரி வுடன் கூறினார். உடனடியாகச் செல்லாமல் அந்த இளை ஞன்; தயங்கித் தயங்கி அங்கிருந்து உள்ளே சென்றான். இளைஞன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் வேங்கை போல் உருக்கொண்ட ஒருவர் மாயவரை நோக்கி ஓடோடி வந்தார். அவரைப் பார்த்தவுடன் மாயவர். குதிரையிலிருந்து குதித்தோடி தழுவிக் கொண்டார். "ராக்கியண்ணா, சுகம்தானா? "நான் நன்றாக இருக்கிறேன்; நீங்கள்? நானும் நன்றாகத் தானிருக்கிறேன்" மாயவரே! உங்களைப் பார்த்து எவ்வளவு காலமாகிறது... ஆகா... எப்படிப்பட்ட அரிய சந்திப்பு இது...வாருங்கள்: பாசறைக்குள் போகலாம். இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியவாறு பாசறைக்குள் வந்தனர். மாயவரை, தந்தம் பதித்த ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டு ராக்கியண்ணன்; தானும் அவர் எதிரே ஒரு நாற் காலியில் உட்கார்ந்து கொண்டார். மாயவரின் கண்கள் பாச றையை வட்டமிட்டன. வில்லம்பு, வேல், வாள். குத்துக் கட்டை, சிலம்பம், கட்டாரிகள், கேடயங்கள்; இப்படிப் படைக் கலன்கள் நிறைந்து காணப்பட்ட அந்தப் பாசறையை மாயவர் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, இரண்டு இளநீர் களைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த இளைஞன் விரைந்து வந்து இருவர் கைகளிலும் கொடுத்தான். அவனைக் குறுநகை யுடன் மாயவர் உற்று நோக்கவே; அவன் நெளிந்தான். 'மாயவரே! இந்தச் சிறுவன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொண்டதற்கு மன்னித்து விடுங்கள்" என்றார் ராக்கியண் ணன்! 'எதற்காக மன்னிப்பு? அவனுக்கிட்ட பணியை அவன் கடமை உணர்வோடு செய்கிறான். அதற்காக அவனைப் பாராட்டத் தானே வேண்டும்!' 51