பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் 盟q? அதிகமென்று பட்டது. ஆணுல், களியாணமாகிய மூன்று வருஷங்களுக்குள்ளே இப்பொழுது துறவு பூண வேண்டு மென்கிருய். கணவன் வீட்டிலும் உனக்குச் சுதந்திரம் இல்லையென்று இதற்குள்ளே தோன்றிவிட்டது. வசந்தர் : மூன்று வருஷ்மென்ருல் ஒரு நானல்ல. அது எனக்கு மூன்று யுகம். அத்தனை நாட்களுக்குப் பிறகு தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். சாது: உனக்கு இப்பொழுது வடதென்ன? வசந்த இருபத்தொன்று. சாது :-என்னுடைய வயது உனக்குத் தெரியுமா? எனக்கு எழுபத்திரண்டாகிறது. அதிலே பாதி நாளே நான் என் குருநாதருக்குத் தொண்டு செய்யும் சிஷ்ய ஞகவே கழித்தேன். முப்பது வருஷம் சோதனை செய்த பிறகுதான் அவர் எனக்குக் காஷாயம் அளித்திார். அவர் செய்ததுதான் சரியென்று நான் அறிவேன். எத்தனேயோ தடவை என் மனம் சபலமடைந்திருக்கிறது; துறவு நிலையை விட்டுத் தடுமாறியிருக்கிறது. வசந்தா : நீங்கள் தடுமாறியிருக்கலாம். அதனுல்எல்லோரும் அப்படித் தடுமாறுவார்கள் என்று எப்படி நினைக்கலாம்? என் மனதிலே தடுமாற்றம் ஒன்றுமில்லேநான் இப்பொழுது இரண்டு காரியங்களை ஒரே தீர்மானத் தின் மூலம் சாதிக்கப் போகிறேன். சாது : என்ன இரண்டு காரியங்கள்? வசந்தர் : பெண்கள் துறவறம் ஆண்டு சத்தியான்ே கனாக இருக்கத் தகுதியுடைவர்களல்ல என்ற எண் னத்தை அடியோடு மாற்றப் போகிறேன்; அதோடு இனி மேல் நான் யாருக்கும் அடிமையாக இருக்கப் போவ தில்லை, -