பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பொன்னியின் தியாகம் I கவனிக்கவில்லையா? உன் கண்களிலே ஆண்கள் எங்கே தென்படுகிமூர்கள்? தாமோதரன் : வசந்தா, நீ சொல்லுவது நிஜந்தானு என்று தெரிந்துகொண்டு பிறகு பார்த்துக் கொள்ளு கிறேன். என் உள்ளம் கோபத்தால் வெடித்து விடும் போலிருக்கிறது......ஆகா-இப்படியா விஷயம் இருக் கிறது? நீ இங்கே தனியாக வந்திருப்பதாகச் சொன்னது என்னே ஏமாற்றவா? வசந்தா : உன் மனைவி யோக்கியமாக இருந்தால் போதும்-மற்றவர்கள்-உன்னிஷ்டம்போல் எப்படி. வேண்டுமாளுலும் இருக்கவேண்டும். அதுதானே உன் னுடைய நினைப்பு? நீ ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருந் தால் உன்மீது பழி வாங்கவே அவள் இப்படி ஆரம்பித் திருக்கிருள். (மறுபடியும் ஏளனமாகச் சிரிக்கிமு ன்.) தசமேதேசன் : உன்னுடைய உபதேசம அது? வசத்தா, பொறு, இன்னும் இரண்டு நாள் கழித்து உனக்குப் பதில் சொல்லுகிறேன். உன்னுடைய வார்த்தை உண்மையா என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டு பிறகு பேசுகிறேன், (ஆத்திரத்தோடு வெளியே புறப்படுகிறன்.) வசந்தா : மோதிரத்தை ந ன் ரு கப் பார்த்துக் கொண்டு போ. நல்ல பச்சைக்கல் மோதிரம். !தாமோதரன் அவளே ஒரு தடவை ஏறிட்டுப் பார்க்கிருன். மோதிரத்தையும் பார்க்கிருன். பிறகு கோபமாக வெளியே போகிருன். வசந்தா தனது திட்டம் வேற்றிகரமாகத் தொடங்கி விட்டதென்று புன்முதுவலோடு. திற்கிருள்.} திரை