பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்னியின் தியாகம் 1? மாரன் ; நீ வெளியிலே சொல்லக்கூடாது. இது மிகவும் ரகசியமான காரியம். பொன்னி : எதற்காக இத்தனை பிடிகை போடு கிறீர்கள்? இதுவரையில் என்னிடம் நீங்கள் எதையும் ஒளித்து வைத்ததில்லவே? மாரன் - அதகுல்தான் இதையும் உன்னிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். உனக்காகத்தான் இந்த சூழ்ச்சியை தான் ஒப்புக்கொண்டேன். பெசன்னி : சூழ்ச்சிவா..?-அதென்ன சூழ்ச்சி? மாரன் : வேள் பாரி வெற்றி பெறுவதென்பது நடக்காத செயல். அதனுல் இந்தக் கோட்டைக்குள்ளே மீதி உயிரோடிருக்கிறவர்களேயாவது காப்பாற்ற வேண் டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் ஒரு முடிவு செய்திருக் கிருேம். இன்றிரவு, காவல் காக்கும்போது கோட்டைக் கதவைத் திறந்து விட்டுவிடலாம் என்றிருக்கிருேம். பொன்னி (திடுக்கிட்டு) ஐயோ, நாட்டுக்குத் துரோகம் செய்யவா நினைக்கிறீர்கள்? மாரன் : பொன்னி, உரத்துப் பேசாதே! யார் காதி லாவது விழப் போகிறது. நாங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிருேம். இதல்ை எத்தனையோ பேர் உயிர் பிழைப்பதோடு நமக்கும் பல நன்மைகள் உண்டு. நமக்கு ஏராளமான செல்வம் வரும். பொன்னி : செல்வமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்; மானத்தோடு வாழ்த்தால் அதுவே போதும். தமிழ் நாட்டு வீரர் மரபில் வந்த உங்களுக்கு இந்தத் துரோகச் சிந்தனை எப்படி வந்தது?.