பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繼 பொன்னியின் தியாகம் ஈர்க்கதைப் புவைச் அது என்ன சம்பவம்? கிழவி ஒரு சமயம் உன் பாட்டளுர் சேதுப தியின் முன்னிலையில் கம்பராமாயணப் பிரசங்கம் செய்தார். கடல்தாவு படலத்திலே இதுமாருடைய சாகசத்தைப் பற்றி இலர் வெகு உணர்ச்சியோடு இசால்விக்கொண் டிருத்தார். அந்தச் சமயத்திலே அரசர். "ஹதுமார் எப்படிக் கடலேத் தாண்டிக் குதித்தார்? என்று கேட் டார். உற்சாக மிகுதியால் உன் பாட்டளுர், "இப்படித் தான் தாலிக் குதித்தார் என்று கூறிக்கொண்டே தமது ஆசனத்தைவிட்டு எழுத்து உயரத் தாவினர். அதனல் விதானத்திலிருந்து அழகாகத் தொங்கிக் கொண்டிருந்த தெட்டிமாலே ஒன்று அறுந்த இவருடைய கழுத்திலே விழுத்தது. விதானத்தின் கோலத்தைக் குலேத்து விட்டோமே என்று பாட்டளுருக்கு வருத்தந்தான், ஆளுல் அரசருக்கு ஒரே ஆனந்தம். அந்த மாலையை அப்படியே கழுத்தில் அணிந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். அது முதல் இவருக்கு அப்படிப் பெயர் வத்தது. சர்க்கரைப் புலவர் பாட்டி, சமஸ்தானத்திலே பாட்டனுரைப் புகழ்ந்து பேசாதவர்களே இல்லே. கிழவி நீ அவருடைய பெயர் எடுக்கவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். சர்க்கரைப் புலவர் (சிரித்துக் கொண்டே ; அவர் சர்க்கரைப் புலவர்; நானும் சர்க்கரைப் புலவன், பிறந்த போதே பெயர் எடுத்துவிட்டேன் அல்லவா? கிழவி ஒ! இரட்டிப்பாக எடுத்திருக்கிருய்! அதனல் தான் உனக்கு இரட்டிப்புப் பரிசில் அரசர் கொடுத் திருக்கிருச். (அவள் முகத்தில் முதுவல் இவர்கிறது.1