பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பிறகு, எமது காலைக் கழுவுகிறார் உலக வீரர் பட்டியலில் பெயர் பொறிக்கப்படவேண்டிய தகுதி பெற்ற, ராஷ்டிரபதி! இதனினும், பெருமையை, இங்கு மட்டுமல்ல, எங்கேனும் கண்டதுண்டா—என்று சனாதனி கேட்பது, தெரிகிறதா! நிலை இது—நாடு இது—நாட்டின் பெரும் தலைவர் போக்கு இவ்விதம்—விழாவிலே பேசியதோ, புத்தப் பொலிவு மீண்டும் தோன்றத் தொடங்கிவிட்டது, என்று!

புத்த மார்க்கம், இப்படிப்பட்ட பொருளற்ற, குல பேதத்தை மட்டுமல்ல, ஜாதி ஆணவத்தை வளர்க்கக்கூடிய முறைகளைக் கண்டித்து, எழுப்பப்பட்ட அறிவுப் புயல்.

அரசுகளை ஆட்டிப் படைத்து வந்த வேத மார்க்கம், மனித குலத்தின் மாண்பையே மாய்த்துவிடும் என்று எடுத்துரைத்த பகுத்தறிவு மார்க்கம், புத்த மதம்.

வேத மார்க்கத்தவர் திண்டாடித் தவிக்கும் விதமான அறிவுப் பிரசாரம் நடாத்தி, பாமரனும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குப் பகுத்தறிவு புகட்டி, மணிதகுல மேம்பாட்டுக்குத் தேவையான பண்புகளை எடுத்துக் காட்டிய, புத்த மார்க்கம், எளிதிலே கிடைத்ததல்ல—இந்த அறிவாயுதத்தைக் காண சித்தார்த்தர் பட்டபாடு கொஞ்சமல்ல.

அரச மனறங்களிலெல்லாம் ஆரியக் குருமார்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலம்.

காலாகாலத்தில் மழை பெய்யாவிட்டாலும், கொடிய நோய் ஏதேனும் ஏற்பட்டாலும், போர் மூண்டாலும், பூபதிக்குப் புத்ரபாக்கியம் இல்லை என்றாலும், வேள்விகளைச் செய்து, விசேஷ பலன்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழப் பதிந்திருந்த காலம். படைபலத்தை விட