பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


அரண்மனையில் தாதியரும் ஊழியரும் சீராட்டிப் பாராட்ட, மன்னரும் அவர்தம் மனையாட்டியும் மகிழ்ந்து கொண்டாட, சித்தார்த்தர் வளர்ந்து வந்தார்.

‘ஆரியகும், தமது அடிபணியப் புதிய ராஜகுமாரன் வளர்ந்து வருகிறான்’ என்று தான் எண்ணினர்.

எல்லா அரசிளங்குமார் போலவே அவருக்கும் திருமணம் நடந்தது—பேசும் பொற்சித்திரம் அவருக்கு கிடைத்த இல்லாள்! இன்பப் பெருக்காம், குழந்தையும் பிறந்தது—இன்னமும் என்ன வேண்டும்? பொன் விலங்கு போதுமான அளவுக்குப் பூட்டப்பட்டு விட்டது! சித்தார்த்தருக்குள் புத்தர் இருப்பது யாருக்கும் தெரியவில்லை—எதிர்கால அரசர்மட்டுமே அனைவர் சுண்களுக்கும் தெரிந்தார்.

அவர் கண்களிலேயோ, மனிதன் தெரியலானான்!
வறுமையின் பிடியிலே சிக்கிய மனிதன்!
மரணத்தால் தழுவப்பட்டுவிட்ட மனிதன்!

இந்தக் காட்சிகளைக் கண்டார் சித்தார்த்தர், மெள்ளச் சிரித்தார்!

மனிதன் என்றால் இதுதானா!—என்று சிந்தை குழம்பிய நிலையில் கேட்டார் சித்தார்த்தர்—“வேறென்னவாம்! மனிதன் என்றால் மலர்முகவதி, அவள் தரும் மதுநிகர் இன்பம், மழலை மொழிக் குழவி, மணம் தரும் தோட்டம், மந்தகாசம் தரும் அரசு, இவ்வளவுதான் என்றுஎண்ணிக்கொண்டாய்! மனிதன் துக்கம், பிணி, மரணம், எனும் கொடிய பிடிகளிலே சிக்கிக் கொள்ளக்கூடிய மிக மிகப் பலஹீனன், என்றார் புத்தர் ! ஏன்? என்று அச்சத்துடன் கேட்டார் சித்-