பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 முடிந்தது. அன்றைய வம்புக்கு அடிகோலிய பொன்னங் கண்ணிக் கீரையின் கதையைப் பற்றி அவளிடம் சுந்தரேசன் தானே சொன்னர் ? - மீனுட்சி ஒன்றும் சொல்லவில்லை அல்லவா ? மீனாட்சி எழுந்தாள். சோறு சாப்பிடலேயா அம்மா ?” 'ஊஹ9ம். இதுக்கு மேலே வயிறு தாங்காது, மஞ்சு. கொளுச நாழி ரெஸ்ட் எடுத்துக்கலாம். சாயங்காலம் முண்டக் கண்ணி அம்மனேயும், கபாலீஸ்வரர் - கற்பகாம்பிகையையும் சேவிக்கலாம். அப்புறம் விடியவிடிய வேண்டுமானுலும் பேசிக் கிட்டிருப்போம். உனக்கும் லிவுதான். எனக்கும் லீவுதான்!” பேச்சைத் துண்டாடாமலே கை கழுவித் திரும்பினள் மீனுட்சி. வயிற்றைப் பிசைந்தாள் மஞசுளா.

பின்னலே போகணுமா, என்ன ? சொல்றது தானே ? நம்ப வீட்டிலேகூடக் கூச்சமா அம்மா?’ என்று சொல்லி, வழி காட்டினுள் அன்னே.

மஞ்சுளா போய்த் திரும்பியபோது, அவள் கையில் திரை உலகப் பத்திரிகை ஒன்று இருந்தது, அதன் முகப்புப் பக்கத் தில் அன்னேவடிவமாக வேடம் புனேந்து காட்சியளித்த அன்னை யின் படம் வெளியாகியிருந்தது. அந்தப் போட்டோவைப் பார்க்கப் பார்க்க மஞ்சுளாவுக்குப் பெருமையாக இருந்தது. கொஞசப் பொழுதுக்கு முன்னதாக இந்த வீட்டிற்குள் அம்மா அப்பாவின் உடைபட்ட கல்யாணப் படம் உடைபட்ட கோலத் தோடுமட்டுமல்லாமல், ஏதோ ஒரு மூலையிலும் ஏன் நாதியற்றுக் கிடக்கவேண்டும்? அம்மா?-புதிராக இருக்கிறதே எல்லாம்? மஞ்சுக்குட்டி இதைப் பாருடா !” என்று அழைத்தாள் மீனுட்சி,