பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo கூலியை-காத்துக்கிட்டிருக்கிற கூலியை என் கணவர் ஏற்றுக் கிடவேண்டியதுதான் விதியோட தீர்ப்பாகவும் இருக்க முடியும் ஆகவே, இது சம்பந்தமாக-அதாகப்பட்டது, எங்களுடைய குடும்பப் பிரச்சினை சம்பந்தமாக இனி நீங்க என்ன த்லையிடா மல் இருந்தால் தேவலாம் ! என் அருமை மகளே அவள் விரும்புகிறவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேணுமென்கிறதுதான் என் லட்சியக் கன வாகும். அதை திறைவேற்றத்தான் என் உயிரை நான் சுமந்து கிட்டு வாழ்கிறேன் . இது அந்த முண்டக்கண்ணி அம்மனுக்கு தான் தெரியும் : ஆமாம், ஞானசேகர் !" ளுேட்சியின் குரல் உணர்ச்சிப் பெருக்கில் உடைந்தது; உள்ளத்துச் சுமையில் கண்ணிரும் உடைந்தது. 'அம்மா " மஞ்சுளா விம்மினுள், ஞானசேகரன் எழுந்துவிட்டான். சாப்பிடலாமா, ஞானசேகர்? என்று கேட்டாள் மீனுட்சி. "உங்க வீட்டிலே சாப்பிட நான் விரும்பல்லேங்க, அத்தை என்னை மன்னிக்க பிரியமிருந்தால் மன்னிச்சிடுங்க!” சொற்களின் எதிரொலியைப் பின்னே விட்டுவிட்டு. நடந் தான் ஞானசேகர், டாட்ஜ், அவனுக்காக எத்தனை நாழிதான் காத்துக் கொண்டிருக்க முடியும்?