பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கள் எனக்கு ஆத்திரமும் அழுமையுமாக வந்தது. உடனே பாவாடை சலசலக்க உங்களை நெருங்கி, "உன் பெண்டாட்டி வந்திருக்கேன். வான்னுகூடச் சொல்லமாட்டேங்கிறியே ?” என்று கோபித்தேன் உங்களே. அப்போது நீங்கள் என்ன சொன்னர்கள் ? என்று நிகன விருக்கிறதா, அத்தான்?- எங்க பங்களா வாட்டம் உனக்கும் பங்களா இருக்குதா? இல்லைதானே? பின்னே, நீ எப்படி எனக் குப் பெண் ட்ாட்டியாக ஆக முடியுமாம்? சும்மா பகல் கன்வு காணுதே!... ஆமா, சொல்லிட்டேன்!...” என்று ஏசிய ஏச்சை நீங்கள் எப்படி மறத்திருக்க முடியும்? அந்த ஏச்சுப் பேச்சை நான் எங்ங்னம் மறப்பேன், அத்தான்? மறக்கக்கூடிய அபாய அறிவிப்'பா அது? எனது பிஞ்சு நெஞ்சிலே விதி அன்றைக்கு ஏற்றிவைத்த அந்த டேஞ்சர் சிக்னலே-அதே விதி இன்றைக்குத்தான் இதோ, இறக்கி வைக்கப் போகிறது!.. என் கனவும் மணல் வீடும் ஒன்றேதான்! ஒரு முறை நாம் பரிமாறிக் கொண்ட ஒரு லேப்ரரி நாவலிலே காதல் என்பது புரட்கிக்கு மறுபெயர் என்று சொல்லப் பட்டி ருந்தது கண்டு நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் அல்லவா? அது உங்களுக்கு மிகப் பொருத்தமே. இலட்சாதிபதி வீட்டுத் திருக் குமாரளுகிய தாங்கள் என்னக் காதலித்தது உண்மையிலேயே ஒரு புரட்சிதான்! ஆல்ை, நீங்கள் சொல்லும் அந்தக் காதல் நான் எங்கே கண்டேன், அத்தான்? நீங்கள் சொல்லுகிறமாதிரி எனக்குப் பங்கள வேண்டாம்: ஆனல் நிழலுக்கு அண்டி ஒண்டக் கேவலம் சாண் தரையாகி லும் எனக்கென்று சொந்தமாக இருக்கவேண்டாமா? இந்த இலட்சணத்திலே, உங்களுக்காகதான் கனவு கண்டால்,அதை விதி அனுமதிக்குமா? இல்ல, இந்தச் சமூகம்தான் அங்கீகரிக்