பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இடது கைவிரல் பிடியில் முந்தான நாணயமாக அடங்கியது. பதக்கத்தை வலது கை சமன் செய்தது. அதோ, காந்தி மகாத்மா!... மஞ்சுளா கையேடுத்துத் தொழுதாள். திசை மாறிய பார்வையில், ஹாலின் நாற்புறச் சுவர்களையும் அலங்கரித்த தலைவர்கள் நிழலாடினர். நாடு, இனம், மதம், மொழி, கட்சி போன்ற வேலிகளைத் தாண்டி நின்ற அத்தலைவர்களின் காலடி யில் உலகம் நன்றியோடு சுழன்று கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள், பெருமையும் பெருமிதமும் பிடிபடவில்லை. சுவர்க் கடிகாரம் பத்து அடிக்கிறது. மஞ்சுளாவின் கடமை உள்ளம் குறுகுறுக்கத் தொடங்கியது. நீண்ட கூடத் தைக் கண்ணுேட்டமிட்டபடி, அவள் தன் ஆசனத்தில் அமர்ந்தாள். ജൂൺഥേൻ அவள் சாதாரண மஞ்சுளா அல்லள்!-- “மகாத்மா பதிப்பகத்தின் லேடி டைப்பிஸ்ட் மஞ்சுளா வாக்கும்! மருதாணி விரல்கள் இதோ, தட்டெழுத்துக்களில் விகள் யாடத் தொடங்கிவிட்டன: முன் நெற்றியில் துளிர்த்திருந்த வேர்வையைத் துடைத் துக் கெண்ேடே முதுகைச் சற்றே நிமிர்த்தினுள் மஞ்சுளா, ஒன்ருகக் கலந்து கிடந்த அலுவலகக் கடிதத் தாள்களை வகைப் படுத்திவிட்டு, மேஜையைப் பார்த்தாள், இன்னும் ஒரேயொரு தப்ால்தான் பாக்கி. அதையும் டைப் செய்தால், இப்போதைக்கு இந்த செட் பூர்த்தியாகிவிடும். காத்திருந்த கடிதத்தின் நகலைப் படித்தாள். நிர்வாகி இளங்கோவின் தமிழில் நயம் இருக்கும். அவளும் அதை நயந்ததுண்டு. இளங்கோ பதிப் பகத்தின் உரிமையாளரான திருவாளர் செந்தில் நாயகத்திற்குத் துரத்து உறவுக் காரராம் இவர், கொள்வினே-கொடுப்பிகனக் கான உறவு முறையாம். ஆலுைம், ஏழ்மை நில. ஏழ்மை மட்டும் குறுக்கிடாடில் இருந்திருந்தால், முதலாளியின் ஒரே