பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நீதியின் காவல் தலத்திலே, கடமைக்குப் பற்ருக்குறை இருக்கலாமோ ? சுவர்க் கடிகாரம் மங்.டிங் கென்று ஏழு முறை அலறி ஒய்ந்தது. பாதை தடுமாறி, முள் படல்மீது கால் வைத்துவிட்ட மாதிரி பதைத்துப் புடைத்துக் கொண்டேயிருந்த மஞ்சுளா ஏறிட்டு விழிந்தபோழ்தில், அங்கே தன் எதிரில் தன் தந்தை சுந்தரேசன் நிற்பதைக் கண்டதும், உணர்ச்சித் தவிப்பில் ஒரு கணம் அவள் நில கலங்கிவிட்டாள். அப்பா!' என்று விளித்தாள். விழிகள் சுழித்தன.

மஞ்சு, ஏம்மா இப் படிக் கலங்கித் தவிக்கிறே? இப்போ என்ன நடந்திட்டுது?’ என்று தொண்டை அடைக்கக் கேட் டார் சுந்தரேசன். அந்திச் செவ்வகமாக அவர் கண்கள் காணப்பட்ட ன.

"இனி என்ன அப்பா நடக்கவேனும் ?: கண்களைத் துடைத்துக் கொள்ள மட்டுமே அவளால் அப்போதைக்கு முடிந்தது. 'இப்போது ஒண்ணுமே நடத்திடல்லே, மஞ்சு 1 என்று பொய்யான புன்னகையைக் காட்டிஞர் மஞ்சுளாவின் அப்பா. பின்னே, நீங்க ஏனப்பா கைது ஆனிங்க?" என்று உறங்காத நீதிபேர்ல விழிப்புடன் விசாரித்தாள் சுந்தரேசனின் அருமைப்புதல்வி. ஒரு விடிை அப்படியே வாயடைத்துப் போய்விட்ட சுந்த ரேசன், மறு விடிை வாயைத் தூக்க எத்தனம் செய்தார். கலந்து கிடந்த கிராப்பு வாடைக் காற்றில் அலேந்தது. அதற்குள் ஞானசேகர் விரைவாகத் திரும்பி, சரி, வாங்க |aாழா போகலாம்; வா, மஞ்சுஸ்: என்ருன்,