பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 நினைவுகள் மனவுணர்வுகளில் கூடுவிட்டுக் கூடு பாயவும் தொடங்கின. கண்ட கனவும், கொண்ட கொள்சையும் பலித மடைந்து. பெற்ருேரை இசைந்திருக்கச் செய்ய வேண்டுமென்று தவம் இருந்த தருணத்தில், அவ்விருவருக்கும் ஊடே இருந்த பிளவைப் பொற் பிளவாக ஆக்கித் தொலைத்ததே வேப்பேரி காவல் நிலேய நிகழ்ச்சி அப்பா சுந்தரேசன் கைது செய்யப் பட்டதற்கு இப்படியொரு காரணம் அமையுமென சற்றும் எதிர் பார்த்திருக்க வில் லே மகள் மஞ்சுளா, சட்ட விதியும் விதியின் சட்டத்தையும் எதிர்கொள்ளும் ஒரு மன வைராக்கியத்துடன் தன் தாயையும் தந்தையையும் சத்திக்கத் தயாராகிக் கொண் டிருக்கின்ருள் மஞ்சுளா, காலம் ஒரு புள்ளிகான், குளியலறைக்குச் செல்வதற்காக அவள் டவலேத்தேடிகுள்; டவல் கிடைத்தது. டவுலின் அடியில் பதுங்கிக் கிடந்த டைரி யும் அதன் கீழே ஒளிந்திருந்த லெட்டர் பேப்பர்களும் சேர்ந்து கிடைத்தன. குறிப்பறிந்து, ஒரு கடிதத் தாளே எடுத்தாள். அவள். அன்பிற்குரிய நண்பர் உயர்திரு மாசிலாமணி அவர் கட்கு என்று துவங்கி அக்கடிதத்தைத் தொடர முனைந்த பொழுது, வாடிக்கைக் காய்கறிக்காரி தங்கச்சி தங்கச்சி 1. என்று ராகம் போடவே, அவள் எரிச்பலுடன் வாசலுக்கு விரைந்தாள். அந்தக் காய்கறியின் வீரப்பிரதாயங்களைப் பின்னுரையாக்கி விட்டுமுடிவில்தான் திரையைக் கிழித்தான் காய்கறிக்காரி, பொன்னங்கண்ணிக்கிரை!... மஞ்சுளாவுக்குத் திக் கென்றது. சமயோசிதமாகச் சமா ளித்துக் கொண்டாள். இருபத்தஞ்சு காசுக்குக் கொடு: என்று கூறிக் காசைக் கொடுத்தாள். : ' போதுமா, தங்கச்சி? * so இப்போதைக்குப் போதும். நான்க்கு என் கல்யாணத் துக்கு நிறைய வாங்கிடுறேன்! : -