பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நல்ல பெண் அம்மா நீ ! மஞ்சுளா ஒரு முறை கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்தாள். அம்மா ஏன் இப்படித் திடீரென்று செருமிச் செருமி அழுகிருள். மஞ்சுளர் பெருமூச் செறிந்தாள். குலேந்த அமைதியை மீட்டுக் கொண்டு அன்னையை நோக்கி நகர்ந்தாள், கைகளில் படிந்திருந்த ஈரம் இமை வளையங்களுக்குத் தாவியிருக்கலாம். அம்மா, இப்த்ோ என்னம்மா நடந்திட்டுது ? ஏனம்மா இப் மடிச் செருமிச் செருமி அழுதுகிட்டு நிற்கிருய்? என்று ஆதர வும் அன்பும் பிரிவினே ஆகாத நெகிழ்ச்சியோடு கேட்கலானுள், மீட்ைசி அவளேப் பரிதாபததோடு. ஏறிட்டு நோக்கினுள், இமைகளின் படபடப்பு-விசும்பல் ஒலியின் அலைகள்-நெஞ் சின் துடிதுடிப்பு இன்னமும் மாறவில்லை, மமையவில்லை. மஞசு நான் பாவி அம்மா, என்று விம்மி வெடித்து மண்டை. யில் அடித்துக் கொண்டாள் மீளுரட்சி. மஞ்சுளாவின் மெய் சிலிர்த்தது. நான் பர்வி' என்று அம்மா வருந்தித் துடித்துக் தவிக்கிருளே ? தெய்வமே கண் கள் தளும்ப, பெற்றவளே. ஆதுரத்துடன் பார்த்தாள் அன்பு மகள். உணர்வுகளின் சங்கமத்தில் அவள் பேச்சுமணி அடித்தாற் போல கேட்டது. நீயா பாவி, நீ அன்பின் உருவம்': t ஐயோ! மகளே! ஏன் இப்படி என்னேக் கொல்லாமல் கொல்கிருய் ? உன் அப்பா பேரில் எனக்கிருந்த ஆத்திரத்தில் என்னுடைய வீம்பும் கோபமுமே முக்கியம் என்று பெற்ற மகளான உன்னத்தனியே விட்டுவிட்டு வந்த நான் பாவி தானே மஞ்சு?".