பக்கம்:பொன் நாணயம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடனே சென்று சாப்பிடு,’ என்று சொல்லி அவர் வெளியே சென்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகி விட்டது. அவர், என் பொன் நாணயத்தை எங்கே கேட்கின்றாரோ என்று நான் பயந்து இருந்தேன். ஆனால் அவர் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆதலால் நான் மிகவும் சந்தோஷத்தோடு வீட்டில் உள்ளே சென்றேன்.


5

"ஒரு வேலைக்காரன் எனக்கு உணவு கொண்டு வந்தான். அப்போது எனக்குச் சாப்பாட்டின் மீது விருப்பம் செல்லவே இல்லை. என் எண்ணம் அந்தப் பொன் நாணயத்தின் மீதே இருந்தது. நான் அங்கே ஒருவரோடும் பேச

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/19&oldid=1318263" இலிருந்து மீள்விக்கப்பட்டது