பக்கம்:பொன் நாணயம்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணாசல முதலியார். அவருக்கு நிலங்கள் மிகுதியும் இருந்தன. வேலையாட்களும் பலர் இருந்தனர். நான் காலையில் எழுந்து மாடுகளை மந்தை வெளிக்கு ஒட்டுவேன் ; பிறகு வேலையாட்களோடு வயலுக்குச் சென்று வேலை செய்வேன்.

என் எசமானர் எனக்கு வேளைக்குச் சோறு போடுவார். சில சமயங்களில் நான் கூழ் குடிப்பதும் உண்டு. பெரும் பொங்கல், தீபாவலி முதலிய நாட்களில் அவர் எனக்கு இரண்டு துணிகள் வாங்கித் தருவார்.

என் எசமானர், எனக்கு இவைகளைத் தவிர வேறு பணம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் எனக்கு எவரேனும் தம்பிடி அல்லது காலணா கொடுப்பர். அப்போது நான் அதைக் கடையிலே கொடுத்து ஏதேனும் வாங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/9&oldid=1317043" இலிருந்து மீள்விக்கப்பட்டது