பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணா துரை வெள்ளுடை வேந்தன் வீரத்தியாகராயர், தீரா விடச் சமுதாயத்துக்காகத் துவக்கிய சம உரிமைப் போரிலே, பல வெற்றிகளைக் கண்ட சமுதாயம், இன்று. இரத்தக் கண்ணீர் விடக்கூடிய விதமான வேதனை தரும் தோல்வியைக் கண்டு விட்டது. ட்டம், திட்டமாகக் கூறுகிறது. ஜாதி காரண மாக, யாரையும், கல்வித் துறையிலே மறுக்கக் கூடாது என்று. னுமதிக்க இது, பரந்த நோக்கமாம் --ஜனநாயகப் பண்பாம்- புதிய இந்தியாவின் இலட்சணமாம் -- இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக் கிறது. கம்யூனல் ஜி.ஓ.ரத்தாகி விட்டது இனி பார்ப் பன மாணவர். இவ்வளவு எண்ணிக்கைதான் கல்லூரி களில் சேர்க்கப்படுவர், என்ற முறை இராது, 'மார்க்கு என்னும் தகுதியைக் கவனித்து யாரும் சோத்துக் கொள்ளப்படுவர். இதன்படி, கல்வி நிலையங்களிலே, ஒரே வகுப்பு பார்ப்பன வகுப்பு நிரம்பிவிடும் - மற்ற வகுப்பார் ஜாதீய முறையினால் பின்னணிக்குத் தள்ளப்பட்ட வகுப்பினர் மார்க் அந்த அளவுக்குப் பெறவில்லை என்ற காரணத்துக் காகக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், வெளியே வாட்

வேண்டும்.


9