பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை விரும்பி- தேனுடன் தெளிவும் கொண்டவன் யாருக்குத் தருவான், தேன் ! வாடும் பயிருக்கு நீர் பாய்ச்சுவர்- வளைந்த வாழ்வை நிமிர்த்துவர் - வகை குலைக்கப்பட்ட வருக்குக் கைகொடுப் பர், கண்ணும் கருத்தும் கெடாத கண்ணியவான்கள். பசி ஏப்பக்காரனுக்குக் கஞ்சிக் கலயமும், புளி ஏப்பக்காரனுக்கு மருந்து வட்டிலும் தரப்படுவதுதான் முறை என்று கூறுவர் மனித மாண்புணர்ந்தவர்கள். இருள் சூழ்ந்த இடத்துக்கு விளக்கொளி தேவை டர்பட்ட வாழ்வில் உழல்வோருக்கு உதவி தேவை. ." மக்களின் நிலைமையைக் கண்டறிந்து, எவரெவர் எந்தெந்த நிலைமையில் உள்ளனர். அவருக்கு உற்ற குறை பாடுகள் யாவை, அவைதமைக் களைய எம்முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை ஆய்ந்து, ஆவன செய்து, ஒரு நாட்டு மக்களிடையே, ஏற்றத் தாழ்வு, மானால், நிறை கெடாத நிலையை உண்டாக்கக் கூடிய. முறைகளை வகுத்தலே நல்லாட்சியாளர் செய்யவேண்டிய கடமை -அதுவே ஆட்சியின் மூலம் மக்கள் பெற வேண் டிய பேறு. ஓநாயை வேட்டைக்காரன் கொன்று விடாமல் பாதுகாப்பது அல்ல, நீதி-ஓநாய், ஆடுகளைக் கொன்று விடாமல் பாதுகாப்பதுதான் நீதி-நேர்மை,

19


19